நீங்கள் எவ்வளவு டோல் கட்டணம் செலுத்த வேண்டும் ? Pexels
உலகம்

நீங்கள் எவ்வளவு டோல் கட்டணம் செலுத்த வேண்டும் ? இனி கூகுள் மேப் சொல்லும்

“வழக்கமான சாலைகளுக்கும், டோல் கட்டணம் செலுத்தக் கூடிய சாலைகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை பயணிகள் தெரிந்துகொள்ளும் விதமாக, முதல் முறையாக டோல் கட்டண விவரங்களை வெளியிட இருக்கிறோம்”

NewsSense Editorial Team

நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டால், நாடு முழுவதும் டோல் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பது தான் எதார்த்தம். இந்த டோல் கட்டணம் எல்லா சாலைகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொரு சாலையிலு அது மாறுபடும். சில நேரங்களில் உங்களிடம் பணம் குறைவாக இருக்கும். ஆனால், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரியாத சூழல் உருவாகலாம். இந்த சிக்கலை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுகிறது.

இது குறித்து தங்களின் கம்யூனிட்டி பேஜ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருக்கிறது கூகுள் மேப் நிறுவனம். அதில், “வழக்கமான சாலைகளுக்கும், டோல் கட்டணம் செலுத்தக் கூடிய சாலைகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை பயணிகள் தெரிந்துகொள்ளும் விதமாக, முதல் முறையாக டோல் கட்டண விவரங்களை வெளியிட இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் பயணத்தைத் தொடங்கும் முன், சேருமிடம் வரையிலான மதிப்பிடப்பட்ட டோல் விலையை காணலாம். இப்படி டோல் கட்டணங்களை மதிப்பிட்டு தரவேற்றம் செய்வதற்கு, அந்தந்த பகுதி டோலிங் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட "நம்பகமான தகவலை" Google பயன்படுத்தி இருக்கிறது. "டோல் பாஸ் இருக்கிறதா? இல்லையா?, வாரத்தில் அந்த நாள் என்ன?, நீங்கள் குறிப்பிட்ட டொலை கடக்கும் குறிப்பிட்ட நேரத்தில் கட்டணம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது? என்பது போன்ற காரணிகளை கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்," என்று கூகுள் விளக்கியது.

மேலும், டோல் பாஸுடன் பயணிப்போர் மற்றும் பாஸ் இல்லாமல் பயணிப்போரும் தங்களுக்கான டோல் கட்டணங்களை அறிந்து கொள்ளும்படியாக தனித்தனி தேர்வுகளை வழங்கியிருக்கிறது கூகுள்.. ஏனென்றால், பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் முறையைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. ஒருவேளை நீங்கள் கட்டணம் செலுத்தி பயணிக்க விரும்பவில்லை என்றாலும், உங்களுக்கான தனி பாதையை காட்டுகிற வசதியையும் கூகுள் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு சுங்கச் சாவடிகள் இல்லாத பாதையை கூகுள் காட்டும்.

முதற்கட்டமாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 2000 டோல் சாலைகளுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் iOS -ல் டோல் விலைகளைப் பயனர்கள் பார்க்கத் தொடங்குவார்கள் என்று கூகுள் கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் எத்தனை சுங்கச்சாவடிகள் இந்த கூகுள் மேப்ஸ் அம்சத்தின் அங்கமாகி இருக்கின்ற என்பது குறித்த சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?