Greek hairdresser  Twitter
உலகம்

முடி வெட்டுதலில் கின்னஸ் சாதனை படைத்த நபர் - அப்படி என்ன செய்தார்? | Video

Priyadharshini R

நவீன உலகில் தங்களின் திறன்களை சாதாரணமாக வெளிப்படுத்தி, பலர் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

காரமான உணவுகளை உட்கொள்ளுதல், மூக்கின் வழியே பலூனில் காற்றை நிரப்புதல், முத்தத்தில் சாதனை என வேடிக்கையான விஷயங்களை செய்து பலர் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் முடி வெட்டுதலில் சாதனையை படைத்துள்ளார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் ஒரு நாவிதர்.

HairCut

அலங்கார நிபுணரான இவர் தலைமுடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா?

டிரிம்மர் உதவியுடன் 47.17 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

முடி வெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளம் குறித்து முதலில் அளந்து கொண்ட கின்னஸ் அமைப்பு, பின்னர் முறையாக பணி முடிந்து இருக்கிறது என உறுதி செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கின்னஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளனர்

இதுபற்றிய வீடியோ வெளியிட்டு, விரைவாக முடி வெட்டி கொள்ள விரும்புகிறீர்களா? 45 வினாடிகளில் முடி வெட்டி கொள்ளலாம் வருகிறீர்களா? என அதற்கு தலைப்பும் பதிவிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?