umbrella
umbrella twitter
உலகம்

ஒரு லட்ச ரூபாய் குடையை இணையத்தில் கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

Antony Ajay R

ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு குடையை வாங்குவீர்களா? அப்படி வாங்கிய பின் ஒரு மழை நாளில் அந்த குடை வாட்டர் ப்ரூஃப் இல்லை எனத் தெரிந்தால் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?

அப்படி ஒரு குடையைத் தான் வெளியிட்டிருக்கிறது உலகின் சிறந்த இரண்டு நிறுவனங்கள். ஃபேஷன் துறையில் முன்னணி பிராண்டான கூசி நிறுவனம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் அடிடாஸ் நிறுவனம் இணைந்து ஒரு குடையைத் தயாரித்து சீனாவில் வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த குடையின் விலை 11,100 யுவான் என கூசியின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 1லட்சத்து 29 ஆயிரம் ரூபாய். இவ்வளவு விலையில் இருக்கும் குடை மழையைக் கூட தடுக்காதா என்கிறீர்களா? அட உண்மை தான் இது மழையைத் தடுக்காத குடை. இது குறித்து நெட்டிசன்கள் சிலரின் பதிவை இங்குக் காணலாம்.

இந்த குடை மழையிலிருந்து நம்மைப் பாதுகாக்காது எனினும் வெயிலிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் எனக் கூசியின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் மழைக்குத் தாங்காதது ஒரு குடையா அதுவும் ஒரு லட்சம் ரூபாய்க்கு என்று வெளுத்து வாங்குகிறார்கள் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?