UAE Flag Twitter
உலகம்

அரபு அமீரகம் : அடையாள அட்டையைத் தொலைத்து விட்டீர்களா? புதிய அட்டையைப் பெறுவதற்கான வழிகள்

திஜெ

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் எமிரேட்ஸ் அடையாள அட்டை என்பது முக்கியமான ஆவணமாகும். இந்த அடையாள அட்டையை நீங்கள் எப்பொழுதும் உங்களுடன் வைத்திருப்பது அவசியம். அரசு சலுகைகள் பெறுவதற்கு, மருத்துவக் காப்பீடு, போக்குவரத்துக்கான நுழைவு அனுமதி பெறுதல் ஆகியவற்றுடனும் எமிரேட்ஸ் அடையாள அட்டை இணைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களது எமிரேட்ஸ் அடையாள அட்டை திருடப்பட்டதாகவோ, தொலைந்துபோய்விட்டதாகவோ அல்லது சேதமடைந்துவிட்டதாகவோ நீங்கள் கருதினால் புதிய எமிரேட்ஸ் அட்டைக்கு நீங்கள் விண்ணப்பித்து பெறலாம்

புதிய எமிரேட்ஸ் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் :

உங்களது எமிரேட்ஸ் அடையாள அட்டை தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ உடனடியாக அருகிலிருக்கும் ஐசிபி எனப்படும் வாடிக்கையாளர் மகிழ் மையத்தில் ( Federal authority of identity, customs, citizenship port security customer happiness center) தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது அடையாள அட்டை தவறாகப் பயன்படுத்த முடியாதவாறு டிஆக்டிவேட் செய்யப்படும்.

ID Card

Step 1: தொலைக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட எமிரேட்ஸ் அடையாள அட்டை குறித்து புகார் அளிக்க கீழ்க்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் :

- நீங்கள் அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவராக இருந்தால் உங்களது பெர்மிட்டுடன், அசல் பாஸ்போர்டை அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

- 15 வயதிற்குட்பட்ட சிறாரின் எமிரேட்ஸ் அடையாள அட்டை தொலைந்து போகும்பட்சத்தில், பெற்றோர்கள் சிறாரின் பிறப்புச் சான்றிதழுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் சமர்ப்பிக்க வேண்டும்.

- ஐக்கிய அரபு அமீரக குடிமக்களாக இருப்பின் அவர்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டையுடன், குடும்ப அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

- GCC எனப்படும் இதர வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமீரகத்தில் வசிப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

IPC

Step 2: மாற்று எமிரேட் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாற்று அட்டை பெற அருகிலிருக்கும் ICP cutomer happiness center-க்கு நேரடியாகச் செல்வது மூலமாகவோ அல்லது www.icp.ae என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 'ICP UAE’ என்ற மொபைல் செயலி மூலமாகவோ விண்ணபிக்கலாம்.

தேவையான ஆவணங்கள் :

அமீரகத்தில் வசிப்போரின் வகைகளைப் பொறுத்து ஆவணங்கள் வேறுபடும்.

- வெளிநாட்டவர் அல்லது புலம்பெயர்ந்த குடிமக்களாக இருப்பின் – அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அசல், குடியிருப்பு அனுமதிச் சான்று அசல், (4.5 x 3.5 cm) அளவிலான புகைப்படம்.

- 15 வயதிற்குட்பட்ட சிறாராக இருப்பின், பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் அடையாள அட்டை.

- பிற நாட்டு தூதரக அதிகாரிகளாக இருக்கும்பட்சத்தில் - எமிரேட்ஸ் அட்டை வழங்குவதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அவர்கள், பாஸ்போர்ட்டின் அசலை சமர்ப்பித்து அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

UAE

அமீரக குடிமக்கள் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

- அடையாள அட்டை நகல்

- மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தைகள் ஐசிபி மையம் வர முடியாதபட்சத்தில் (4.5 x 3.5 cm) அளவில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

- 15 வயதிற்குட்பட்ட சிறாராக இருப்பின், பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்

- பெற்றோரில் ஒருவரின் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் அட்டை

- சுகாதார அமைச்சகம் வழங்கிய மருத்துவச் சான்றிதழ்

- மூன்றாம் நபர் மூலம் விண்ணப்பிக்கும்பட்சத்தில், அவருக்கான முகவர் சான்றிதழ் அவசியம். அட்டையைத் தொலைத்தவரின் பாஸ்போர்ட் அசலும் கொண்டு செல்ல வேண்டும்.

ஐசிபி மையங்கள் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் செண்டர்கள் மூலம் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் மேற்சொன்ன ஆவணங்களைச் சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்தினார்களானால், 5 வேலை நாட்களில் புதிய எமிரேட் அட்டை வழங்கப்படும்.

Online

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

1. ஆன்லைனில் விண்ணப்பிக்க https://icp.gov.ae/en/service/issue-a-replacement-for-lost-damaged-id-card/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. Service Button லிங்கை கிளிக் செய்யவும்

3. UAE Pass அக்கவுண்ட் மூலம் அல்லது ஐசிபி-யில் புதிய அக்கவுண்ட் உருவாக்கி Login செய்யவும்.

4. நீங்கள் அமீரகத்தைச் சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டிலிருந்து வந்து அமீரகத்தில் தங்கியிருப்பவரா என்பதை தேர்வு செய்யவும்.

5. அதன் தொடர்ச்சியாக தோன்றும் விண்ணப்பத்தை உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற தகவல்கள் கொண்டு நிரப்புங்கள்

6. தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள்

7. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்துங்கள்

8. கட்டணம் செலுத்தியதும் உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்ய குறுந்தகவல் மற்றும் இ-மெயில் தகவல் வரும்.

9. 5 வேலை நாட்களில் உங்கள் எமிரேட்ஸ் அட்டை கிடைத்துவிடும். குரியர் மூலமாக உங்கள் இல்லத்துக்கோ அல்லது எமிரேட்ஸ் தபால் நிலையங்கள் மூலமாகவோ அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய அட்டை பெறுவதற்கான கட்டண விவரம்:

1. மாற்று எமிரேட் அடையாள அட்டைக்கு 300 திர்ஹாம்

2. மையங்களில் விண்ணப்பிக்க, படிவங்களுக்கான தொகை 70 திர்ஹாம்

3. ஆன்லைன விண்ணப்பப் படிவங்களுக்கு 40 திர்ஹாம்

4. அதிவிரைவு சேவைக்கு விண்ணப்பிக்க 150 திர்ஹாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?