Babylon Canva
உலகம்

பாபிலோன் : தொங்கு தோட்டம், அதிசய வீழ்ச்சி - ஒரு நகரத்தின் அசரடிக்கும் வரலாறு

பாபிலோனியப் பேரரசு முழுவதும் கலை மற்றும் கட்டிடக் கலை செழித்தோங்கியது. குறிப்பாகத் தலைநகரான பாபிலோனில் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்ட ஊடுருவ முடியாத சுவர்கள் பிரபலமானவை.

NewsSense Editorial Team

பாபிலோனிய என்பது பண்டைய மெசபடோமியாவில் ஒரு மாநிலமாக இருந்தது. இதில் அமைந்த நகரம்தான் பாபிலோன் நகரம். இதன் இடிபாடுகள் இன்றைய ஈராக்கில் அமைந்துள்ளது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு யூப்ரடீஸ் நதியில் ஒரு சிறிய துறைமுக நகரமாக பாபிலோன் நிறுவப்பட்டது.

இது ஹமுராபியின் ஆட்சியின் கீழ் பண்டைய உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாக வளர்ந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரசீக வளைகுடாவிலிருந்து மத்திய தரைக் கடல் வரை பரவியது புதிய பாபிலோனியப் பேரரசு.

இந்த காலகட்டத்தில் அழகான மற்றும் ஆடம்பரமான கட்டிடங்களின் நகரமாக பாபிலோன் மாறியது. இதே காலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் பாபிலோனுக்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டதைப் பைபிள் கதைகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Babylon

பாபிலோன் நகரம் எங்கே அமைந்துள்ளது?

பாபிலோன் நகரம் இன்றைய ஈராக்கின் பாக்தாத் நகரத்தின் தெற்கே 50 மைல் தொலைவில் யூப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்திருந்தது. இந்நகரம் கிமு 2,300 இல் நிறுவப்பட்டது. தெற்கு மெசபடோமயாவின் பண்டைய அக்காடியன் மொழி பேசும் மக்களால் இந்நகரம் உருவாக்கப் பட்டது.

கிமு 1792 முதல் 1750 வரை ஆட்சி செய்த அமோரிய மன்னர் ஹமுராபியின் கீழ் பாபிலோன் ஒரு பெரிய இராணுவ நகரமாக மாறியது. ஹம்முராபி அண்டை மாநிலங்கள் - நகரங்களைக் கைப்பற்றிய பிறகு அவர் தெற்கு மற்றும் மத்திய மெசபடோமியாவின் பெரும்பகுதியை ஒருங்கிணைத்து பாபிலோனிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இதுவே பாபிலோனிய பேரரசு என்று அழைக்கப்பட்டது.

ஹமுராபி பாபிலோனை பணக்கார மற்றும் செல்வாக்குமிக்க நகரமாக மாற்றினார். அவர் உலகின் முதல் எழுதப்பட்ட சட்டக் குறியீடுகளை உருவாக்கினார். இது ஹம்முராபியின் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் ஹம்முராபியின் மரணத்திற்குப் பிறகு பாபிலோனிய பேரரசு வீழ்ச்சியடைந்து ஒரு சிறிய ராஜ்ஜியமாக சுருங்கியது.

Babylon

நியோ - பாபிலோனிய பேரரசு

புதிய பாபிலோனிய பேரரசை சில புதிய அரசர்கள் நிறுவினர். இது கிமு 626 வரை நீடித்தது. கிமு 539 முதல் கிமு 612இல் நினிவேயில் அசீரியர்களை தோற்கடித்த பின்னர் நியோ பாபிலோனிய பேரரசு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசாக மாறியது. நியோ பாபிலோனியப் பேரரசு கலாச்சார ரீதியாக மறுமலர்ச்சியின் காலமாகும்.

பாபிலோனியர்கள் பல அழகான மற்றும் ஆடம்பரமான கட்டிடங்களைக் கட்டினார்கள். மேலும் நேபுகாத்நேச்சார் 2 இன் ஆட்சியின் போது முந்தைய பாபிலோனியப் பேரரசின் சிலைகள் மற்றும் கலைப்படைப்புகளைப் பாதுகாத்தனர்.

பாபிலோனிய வீழ்ச்சி

முந்தைய பாபிலோனியாவைப் போலவே நியோ பாபிலோனியப் பேரரசு குறுகிய காலமே நீடித்தது. இது நிறுவப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குள் கிமு 539இல் புகழ்பெற்ற பாரசீக மன்னர் சைரஸ் தி கிரேட் பாபிலோனைக் கைப்பற்றினார். பாரசீக கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் பாபிலோனின் வீழ்ச்சி முடிந்தது.

யூத வரலாற்றில் பாபிலோன்

கிமு ஆறாம் நூற்றாண்டில் யூத ராஜ்ஜியத்தின் மீதான பாபிலோனிய வெற்றிக்குப் பிறகு, நெபுகாத்நேசர் 2, ஆயிரக்கணக்கான யூதர்களை ஜெருசேலம் நகரத்திலிருந்து அழைத்துச் சென்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாபிலோனில் சிறைபிடித்தார்.

பிறகு நியோ பாபிலோனியப் பேரரசு வீழ்ந்த பிறகு பல யூதர்கள் ஜெருசேலத்திற்கு திரும்பினர். சிலர் பாபிலோனிலேயே தங்கினர். யூத சமூகம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அங்குச் செழித்து வளர்ந்தது. பலர் 1950களில் புதிதாக உருவாக்கப்பட்ட யூத நாடான இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தனர்.

Babylon

பாபேல் கோபுரம்

பாபிலோன் நகரம் எபிரேய மற்றும் கிறிஸ்துவ வேத நூல்களில் அடிக்கடி சுட்டப்படுகிறது. கிறிஸ்துவ வேதங்கள் பாபிலோனை ஒரு வில்லன் போன்ற நகரமாக சித்தரிக்கின்றன. எபிரேய நூல்கள் பாபிலோனிய நாடு கடத்தலின் கதையைச் சொல்கின்றன. நெபுகாத்நேச்சரை ஒரு சிறை பிடிப்பவராகவும் சித்தரிக்கின்றன.

பைபிளில் உள்ள பாபிலோனைப் பற்றிய பதிவுகளில் பாபேல் கோபுரத்தின் கதையும் அடங்கும். பழைய ஏற்பாட்டு கதையின் படி மனிதர்கள் வானத்தை அடைய ஒரு கோபுரத்தை உருவாக்க முயன்றனர். இதனால் கோபமுற்ற கடவுள் அந்த கோபுரத்தை அழித்து பூமி முழுவதுமுள்ள மனிதர்களைச் சிதறடித்தார். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத படி பல மொழிகளைப் பேச வைத்தார்.

Babylon

பாபிலோனியச் சுவர்கள்

பாபிலோனியப் பேரரசு முழுவதும் கலை மற்றும் கட்டிடக் கலை செழித்தோங்கியது. குறிப்பாகத் தலைநகரான பாபிலோனில் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்ட ஊடுருவ முடியாத சுவர்கள் பிரபலமானவை. ஹமுராபி முதலில் நகரத்தை சுவர்களால் சுற்றி வளைத்துக் கட்டினார். நெபுகாத்நேச்சார் 2, நகரில் 40 அடி உயரமுள்ள மூன்று சுவர் வளையங்களைக் கொண்டு மேலும் பலப்படுத்தினார்.

கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் பதிவுகளின் படி பாபிலோனின் சுவர்கள் மிகவும் தடிமனாக இருந்தன. அவற்றின் மேல் தேர் பந்தயம் நடத்தப்பட்டது. சுவர்களுக்குள் உள்ளே இருந்த நகரம் 200 சதுர மைல் பரப்பளவை கொண்டிருந்தது. இப்பரப்பு இன்றைய அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தின் அளவாகும்.

நெபுகாட்நேசர் 2 மூன்று பெரிய அரண்மனைகளைக் கட்டினார். ஒவ்வொன்றும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டன. அவர் பல ஆலயங்களையும் கட்டினார். அவற்றில் மிகப்பெரிய கோவில் எசகில் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆலயம் 280 அடி உயரம் கொண்டது. அதாவது கிட்டத்தட்ட 26 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அளவு.

Babylon

பாபிலோனிய தொங்கும் தோட்டங்கள்

பாபிலோன் என்றாலே நினைவுக்கு வருவது அதன் தொங்கும் தோட்டங்களாகும். மொட்டை மாடிகளில் மரங்கள், புதர்கள், பூக்கள் மற்றும் செயற்கையான அருவிகள் போன்றவை இருந்தன. இது பண்டை உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

இன்னும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொங்கும் தோட்டங்கள் குறித்த ஆதாரங்களை மிகக் குறைவாகவே தந்துள்ளனர். அவை எங்கு இருந்தன, எப்போது இருந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சில ஆராய்ச்சியாளர்கள் தொங்கும் தோட்டங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் பாபிலோனில் இல்லை, அவை உண்மையில் மேல் மெசபடோமியாவில் உள்ள நினிவே நகரத்தில் அமைந்திருக்கலாம் என்கின்றனர்.

இஷ்தார் நுழைவாயில்

பாபிலோனின் உள் நகர நுழைவாயில் இஷ்தார் கேட் என்று அழைக்கப்பட்டது. இது பிரகாசமான நீல நிற செங்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டைக் கொண்டாடும் மதச் சடங்குகள் பொருட்டு நடத்தப்பட்ட பெரிய ஊர்வலங்கள் இஷ்தார் கேட்டிலிருந்து துவங்கிச் சென்றன.

ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நுழைவாயிலின் எச்சங்களைத் தோண்டி அசல் செங்கற்களைக் கண்டெடுத்து பெர்லினின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர்.

Babylon

பாபிலோனின் இன்றைய நிலை

சதாம் ஹுசைன் உயிருடன் இருந்த போது, ஈராக் அரசாங்கம் பாபிலோனிய இடிபாடுகளை அகழ்வாராய்ச்சி செய்தது. நெபுகாட்நேச்சரின் அரண்மனைகளில் ஒன்று உட்பட பண்டைய நகரத்தின் சில அம்சங்களை மறுகட்டமைக்க முயற்சித்தது.

2003 ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் பாபிலோனின் இடிபாடுகளில் ஒரு இராணுவ தளத்தைக் கட்டியது. ஐக்கிய நாடுகளின் கலாச்சார பாரம்பரிய நிறுவனமான யுனெஸ்கோ இந்த தளம் தொல்பொருள் தளத்திற்கு "பெரிய சேதத்தை" ஏற்படுத்தியதாக அறிவித்தது. இந்த தளம் 2009 இல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2500 ஆண்டுக் கால வரலாறு கொண்ட நகரம் உலகிலேயே வேறு எங்காவது இருப்பதற்கு வாய்ப்பில்லை எனும் அளவுக்கு பாபிலோன் நகரம் புராதன பெருமையுடையது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?