Operation Canva
உலகம்

தாயின் வயிற்றில் சிக்கிய குழந்தையின் தலையை வெட்டிய மருத்துவ ஊழியர் - ஓர் அதிர்ச்சி சம்பவம்

Priyadharshini R

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தர்பார்க்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனா குமாரி. இவர் 10 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அங்கிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சனாவுக்கு பிரசவ வலி வந்த போது அங்கு மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்போது பிரசவம் பார்த்தவர் பெண்ணின் கருப்பையிலிருந்த குழந்தையை வெளியில் எடுக்க முயன்றதில் உடல் மட்டும் கையில் வர, தலைப்பகுதி கருப்பையிலேயே மாட்டிக்கொண்டிருந்திருக்கிறது.

Woman (Rep)

குழந்தையின் தலை பெண்ணின் கருப்பையிலேயே இருந்ததால், சனா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

நடந்த விவரத்தைக் கூறாமல் வேறு மருத்துவமனைக்கு சனாவை கொண்டு செல்லுமாறு அவரது உறவினர்களிடம் மருத்துவ ஊழியர் கூறியுள்ளார். இதையடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சனா குமாரி கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையில் குழந்தையின் தலை மட்டும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Hospital

உடனடியாக சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு போலீஸார் சென்ற போது, மருத்துவ ஊழியர் தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் அலட்சியம் காரணமாக நடந்ததா ? இல்லை வேறு எதும் காரணங்களாக நிகழ்த்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?