இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்! Twitter
உலகம்

இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்!

அவர் கடவுளைத் தாண்டி அறிவியலை அணுகினாலும் முற்றிலுமாக கடவுள் மறுப்பாளராக இல்லை. யூதராக இருந்தபோதிலும் மதச்சார்பற்றவராக இருந்தார். ஐன்ஸ்டீன் அறிவியல் ஆசான் மட்டுமல்ல தைரியமாக யூதர்களுக்காக வாதாடும் வக்கீலாகவும் செயல்பட்டார்.

Antony Ajay R

உலகின் மிகச் சிறந்த அறிவியலாளர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு யூதரும் கூட.

ஒட்டமான் பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தேசத்தை உருவாக்குவதில் உறுதியாக இருந்தபோது ஐன்ஸ்டீன் உலகமே கொண்டாடும் அறிவியல் அறிஞராக இருந்தார். இதனால் யூத இனத்தின் முக்கிய அடையாளமாக திகழ்ந்தார் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் யூதர்களுக்காக ஓங்கி ஒலித்தன. அவரது கடிதங்கள் உலக அரங்கில் மதிப்புமிக்கவையாக இருந்தன. அவர் இறந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

அவர் கடவுளைத் தாண்டி அறிவியலை அணுகினாலும் முற்றிலுமாக கடவுள் மறுப்பாளராக இல்லை. யூதராக இருந்தபோதிலும் மதச்சார்பற்றவராக இருந்தார். ஐன்ஸ்டீன் அறிவியல் ஆசான் மட்டுமல்ல தைரியமாக யூதர்களுக்காக வாதாடும் வக்கீலாகவும் செயல்பட்டார்.

ஐன்ஸ்டீனின் தன் காலத்தில் உலகில் எந்த ஒரு விஞ்ஞானியும் பொறாமை கொள்ளும் அளவு திறமை மிக்கவராகவும், புகழ்பெற்றவராகவும் இருந்தார். அவரது புகழ்பெற்ற ரிலேடிவிட்டி தியரியை வெளியிட்ட 6 ஆண்டுகள் கழித்து அவரை அமெரிக்காவுக்கு அழைத்தனர்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர், யூதர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க உதவுவதற்காகவும் ஜெருசலேமில் யூதர்களுக்காக ஹீப்ரூ பல்கலைக்கழகத்தை உருவாக்கவும் நன்கொடை பெற்றார்.

4 ஆண்டுகள் கழித்து ஹீப்ரூ பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. இதன் முதல் ஆளுனர் குழுவில் இடம்பெற்றார் ஐன்ஸ்டீன். இந்த பல்கலைக்கழகம் கல்வி மற்றும் கலாசார மையமாக திகழ்ந்தது. இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியுலகுக்கு தெரியவந்த பலரும் இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கத்துக்காக குரல்கொடுத்தனர். இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர் நோபல் பரிசு வென்று யூத இனத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஐன்ஸ்டீனின் சமகாலத்தில் தான் பல லட்சம் யூதர்களை நாஜிக்கள் கொன்றுகுவித்த நிகழ்வுகளும் நடைபெற்றது. ஜெர்மானியர்கள் ஐன்ஸ்டீனின் பணிகளை, "யூத இயற்பியல்" எனக் கூறி அவரது புத்தகங்களை எரித்தனர். சில காலம் ஜெர்மனியிலும் பணியாற்றிய ஐன்ஸ்டீன் இனி ஜெர்மனியில் காலடி எடுத்து வைத்தால் தூக்கிலிடப்படுவார் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

1930களில் அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தார். ஐரோப்பாவில் நாஜிக்களின் துன்புறுத்தலால் இடம்பெயர்ந்து கொண்டிருந்த கலைஞர்கள், அறிவியலாளர்களுக்காக குரல் எழுப்பினார்.

யூதர்களுக்கான தாயகம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஐன்ஸ்டீன். இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) உருவாக்கத்துக்காகவும் நன்கொடை திரட்டினார். அப்போது இஸ்ரேலை உருவாக்க பெருகிய சியோனிசம் என்ற கொள்கைக்கு ஆதரவளித்தார்.

அந்த காலத்திலேயே 5000 அமெரிக்க டாலர்களை வரை IDF-க்காக வழங்கியுள்ளார்.

"யாரும் தங்கள் உரிமைகளுக்காக போராடாதவர்களை மதிக்கவோ அவர்கள் குறித்து கவலைப்படவோ மாட்டார்கள்" என ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார்.

1948, மே மாதம் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் இஸ்ரேலை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்தபோது "நம் கனவுகள் நிறைவேறுகின்றன" எனக் கூறினார் ஐன்ஸ்டீன்.

சியோனிசம் வெற்றி பெற்ற பிறகு, "ஆயுதபலத்தால் நம் உரிமைகளை நிலைநாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது எனக்கு வருத்தமளிப்பதாக இருக்கிறது" என்றார் ஐன்ஸ்டீன்.

இஸ்ரேலின் முதல் அதிபர் வைஸ்மேன் இறந்த பிறகு பிரதமர் டேவிட் பென் - குரியன் ஐன்ஸ்டீனை அதிபராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் மக்களை ஆள்வதற்கான திறமையும் அனுபவமும் தனக்கு இல்லை எனக் கூறி அதனை ஐன்ஸ்டீன் மறுத்துவிட்டார்.

இன்று இஸ்ரேல், பாலஸ்தீனத்துடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் ஐன்ஸ்டின் இதனை விரும்பவில்லை. அவர் அரேபிய மக்களுடன் சமாதானமாகவும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என எண்ணினார். அதுதான் உண்மையான சுதந்திர்த்தை அடைவதற்கான வழி என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?