Sundar Pichai தினமும் காலையில் பார்க்கும் வலைத்தளம் இதுதான்! (Google இல்லை) Twitter
உலகம்

Sundar Pichai தினமும் காலையில் பார்க்கும் வலைத்தளம் இதுதான்! (Google இல்லை)

நாம் முதலில் நிறுத்த வேண்டியது காலை எழுந்த உடன் சமூக வலைத்தளங்களை பார்க்கும் பழக்கத்தைத் தான். எந்த CEO-வும் அதனைச் செய்வதில்லை.

Antony Ajay R

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை காலை எழுந்ததும் கூகுள் வலைதளத்தை தான் பார்வையிடுவார் என நினைத்திருப்போம். ஆனால் அவர் இந்த கேள்விக்கு மாறுபட்ட பதிலை வழங்கியுள்ளார்.

சுந்தர் பிச்சை போன்ற வெற்றி பெற்றவர்களின் லைஃப் ஸ்டைல் மீது நமக்கு ஈர்ப்பு உண்டு. அதேப்போல வாழ்க்கை முறையை பின்பற்றினால் நாமும் வெற்றி பெறலாம் என நினைப்போம்.

நாம் முதலில் நிறுத்த வேண்டியது காலை எழுந்த உடன் சமூக வலைத்தளங்களை பார்க்கும் பழக்கத்தைத் தான். எந்த சிஇஓவும் அதனைச் செய்வதில்லை.

சுந்தர்பிச்சையைப் பொருத்தவரையில் காலை எழுந்ததும் அவர் டெக் மீம் என்ற பக்கத்தைத் தான் பார்வையிடுகிறார். அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் அப்டேட் செய்திகளையும் பார்க்க முடியும்.

Bloomberg, CNBC, The Verge போன்ற ஊடகங்களின் பிரதான தொழில்நுட்ப கட்டுரைகள் டெக் மீம் பக்கத்தில் தென்படும்.

சுந்தர்பிச்சை மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்துறையின் பல பெருந்தலைகள் டெக்மீம் பக்கத்தின் வாசகர்கள்.

மெட்டா நிறுவனத்தின் CTO ஆன்ட்ரீவ் போஸ்வொர்த், இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸ்ஸேரி, CEO மார்க் சக்கர்பெர்க் டெக்மீம் பக்கத்தை தினசரி பார்வையிடுகின்றனர்.

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, லிங்க்ட்இன் நிர்வாகத் தலைவர் ஜெஃப் வீனர், முன்னாள் பேபால் நிர்வாகி டேவிட் மார்கஸ் மற்றும் முன்னாள் ட்விட்டர் CEO டிக் காஸ்டோலோ ஆகியோரின் ஃபேவரைட் தளமாக் இருக்கிறது Techmeme.

அப்பிள் CEO டிம் குக் இவற்றில் இருந்து மாறுபட்டு தினமும் காலையில் கஸ்டமர் ஃபீட் பேக் மெயில்களைப் படித்து நாளைத் தொடங்குகிறார்.

நீங்கள் உங்கள் நாளை எப்படித் தொடங்க முடிவு செய்துள்ளீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?