Humming Bird தான் உலகிலேயே மிகச் சிறிய பறவையா? உலகின் சிறிய பறவைகள் இவை தான்!  canva
உலகம்

Humming Bird தான் உலகிலேயே மிகச் சிறிய பறவையா? உலகின் சிறிய பறவைகள் இவை தான்!

Keerthanaa R

உலகின் மிகப்பெரிய விலங்கு எதுவென்று கேட்டால் உடனே நீல திமிங்கலம் என்று நாம் சொல்லுவோம். அதே போல உலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச் (தீக்கோழி) என்றும் நமக்கு தெரியும்.

உலகின் மிகச் சிறிய பறவை எது என்பது தெரியுமா?

உலகின் சிறிய பறவைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்

பீ ஹம்மிங் பறவை

இது தான் உலகிலேயே மிகச் சிறிய பறவை. இந்த பறவைகளால் பின்பக்கமாக பறக்க இயலும். கரிபியனில் உள்ள கூபா தீவினை பூர்வீகமாக கொண்ட இந்த பறவைகளின் உயரம் வெறும் 2 இன்ச் தான்.

இவற்றின் எடை ஒரு நாணயத்தை விடவும் குறைவு என்கின்றனர். இந்த பறவைகளின் முட்டைகள் காப்பி கொட்டைகளை விடவும் அளவில் சிறியவை.

கேப் பெண்டுலின் டிட்

சாம்பல் நிறத்திலும், இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்படும் இந்த பறவைகள் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

இவற்றின் எடை 6.5 கிராம் தான். 3 இன்ச் நீளம் உள்ள இந்த பறவை ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய பறவையாகும்.

கேலியோப் ஹம்மிங் பறவை

இவை 2 கிராம் எடை கொண்டவை. மூன்று இன்ச் நீளம் இருக்கும் இந்த பறவைகள் கனடா மற்றும் அமெரிக்க பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. வட அமெரிக்காவின் மிகச் சிறிய பறவைகள் இந்த கேலியோப் ஹம்மிங் பறவை.

இவற்றின் இனிமையான குரல், கிரேக்க பாடகியான கேலியோப்பை ஒத்ததாக இருப்பதால், இந்த பெயர் வந்துள்ளது

Common firecrest

இந்த பறவைகள் ஐரோப்பியாவின் மிகச் சிறிய பறவைகள். 9.3 செண்டிமீட்டர் நீளமும் 5.5 கிராம் எடையும் உள்ள இந்த பறவைகள் வட மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இவற்றின் சிறிய உருவத்தின் காரணமாகவே இந்த பறவைகள் தங்களை வேட்டையாடும் உயிரினங்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள உதவுகிறது

எஸ்மெரால்டாஸ் வுட்ஸ்டார்

தென் அமெரிக்காவின் மிகச் சிறிய பறவைகள் இவை. 2.5 இன்ச் நீளம் உள்ள இந்த பறவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன

வீபில்

இவற்றின் அலறல் சத்தம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே வீபில் பறவைகள் பிரபலமாக அறியப்படுகின்றன. இந்த பறவைகள் எளிதில் மனிதர்களுடன் பழகக்கூடியவை.

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறிய பறவைகளான வீபில் 3.3 இன்ச் நீளமுடையவை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?