Charn Janwatchakal Twitter
உலகம்

தாய்லாந்து : 21 ஆண்டுகள் இறந்த மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த கணவர்

Priyadharshini R

மனைவியின் மீதுள்ள தீரா காதலால் 21 ஆண்டுகள் இறந்த சடலத்துடன் வாழ்ந்து 72 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்.

தாய்லாந்து இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மனைவி 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். ஆனால் மனைவியின் மீதுள்ள தீரா காதலால் அவருக்கு இறுதி சடங்கு செய்யாமல், அவரை வீட்டிலேயே வைத்துள்ளார்.

Charn Janwatchakal

இதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், மனைவிக்கு முறையான இறுதிச்சடங்கு நடக்குமா என்ற அச்சம் எழுந்த பிறகு, தாம் உயிருடன் இருக்கும் போதே மனைவிக்குப் பிரியாவிடை சார்ன் கொடுக்க முடிவெடுத்தார். இதனால் மனைவிக்கு இறுதிச் சடங்கு கொடுக்க எண்ணி அதனை செய்தார்.

மனைவியின் உடல் தகனச்சாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோது, சார்ன் கதறிக் கதறி அழுதாக கூறப்படுகின்றது. அதன்பின்னர் அவர், மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

மனைவி மீது இவர் வைத்திருக்கும் ஆழமான காதல் பலரது உள்ளங்களை நெகிழவைத்துள்ளது. ” வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது” என மனைவி மீது இவ்வளவு அன்புவைக்க ஒருவரால் முடியுமா என நெட்டிசன்கள் பலரும் ஆச்சர்யமடைதுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?