ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் எலான் மஸ்க். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மஸ்க் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, கடுமையான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டார். வழக்கத்தை விட அதிக நேரம் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனையும் அதில் அடங்கும்.
இதனால், சிலர் ட்விட்டரில் மஸ்க்கிற்கு எதிராக கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர். நிறுவனத்தின் Protocolஐ மீறியதாக கூறி மஸ்க் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்தார்.
இதனை ’unusual whales’ என்ற ட்விட்டர் பக்கம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பதிவிட்டிருந்தது. மேலும் மற்றொரு பதிவில், எலான் மஸ்க் ஊழியர்களை உடனடி பணிநீக்கம் செய்துள்ளதாக அனுப்பிய மின்னஞ்சல் செய்தியையும் பகிர்ந்திருந்தது.
“உங்களது சமீபத்திய நடவடிக்கை நிறுவனத்தின் பாலிசியை மீறும் விதமாக இருக்கிறது. இதனால் உங்களை உடனடியாக பணியிலிருந்து நீக்குகிறோம் என்பதை தெரிவிப்பதில் வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தது.
’unusual whales’ன் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்திருந்தார் எலான் மஸ்க். அதில் அவர், ”இந்த மேதைகளை பணி நீக்கம் செய்ததற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இவர்களது அபார திறமை வேறு இடத்தில் பெரிதும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியிருந்தார்.
இது இணையவாசிகளிடையே கண்டனத்திற்கு உள்ளானது. ஏற்கனவே ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது ஒரு பக்கம் இருக்க, எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இவரது இந்த கேலிப் பேச்சு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust