cannabis Twitter
உலகம்

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே கஞ்சா விற்பனை; வந்தது புதிய சட்டம் - எங்கே?

Keerthanaa R

Leafy என்ற நிறுவனத்துடன் இணைந்து, இன்று முதல் கனடாவின் டொரன்டோ பகுதியில் வீடுகளுக்கே கஞ்சாவை வினியோகம் செய்யவுள்ளது ஊபர் ஈட்ஸ் நிறுவனம். மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை விற்பனை செய்யவுள்ளது இதுவே முதல்முறை.

கஞ்சா வினியோகத்தை ஊபர் ஈட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. Hidden Leaf Cannabis, Minerva Cannabis and Shivaa’s Rose ஆகிய மூன்று இடங்களில் கஞ்சா விற்பனைக்கு கிடைக்கும். இங்கிருந்து ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுக்கே டெலிவர் செய்யப்படும் என ஊபர் தெரிவித்துள்ளது.

"மக்கள் எளிதாகவும், பாதுகாப்பான முறையில் கஞ்சாவை பெறுவதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோத செயல்களில் மக்கள் ஈடுபடமாட்டார்கள், மேலும் குற்றங்களும் குறையும்" என ஊபர் ஈட்ஸின் கிழக்கு கனடா பகுதி மேலாளர் தெரிவித்துள்ளார்

ஆனால், ஆன்லைன் மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்ய சில நிபந்தனைகள் உள்ளன. ஆர்டர் செய்யும் நபருக்கு வயது 19ஐ கடந்திருக்கவேண்டும். ஒரு வேளை ஆப்பில் பொய்யான தகவலை பதிவேற்றினாலும், கஞ்சா டெலிவர் செய்யப்படும்போது அவரது வயது சரிபார்க்கப்படும்.

மேலும் இப்படி ஆர்டர் செய்யும் கஞ்சாவை, அதை வினியோக்கிக்கும் CannSellன் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் தான் கொடுப்பார்.

இந்தியாவில் கஞ்சா பயன்பாடு சட்டவிரோதமான செயல் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?