In Thailand's Pattaya, This Unfinished Museum Is Called The Sanctuary OF Truth Twitter
உலகம்

கட்டி முடிக்கப்படாத அருங்காட்சியகத்திற்கு இவ்வளவு மவுசா! சுற்றுலா பயணிகள் குவிவது ஏன்?

கட்டுமானம் முதன்முதலில் 1981 இல் தொடங்கியது. ஆனால் இன்னும் கட்டுமானத்திலேயே உள்ளது. இருந்தாலும் பார்வையாளர்கள் கடினமான தொப்பிகளுடன் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Priyadharshini R

கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாமல் இருக்கும் அருங்காட்சியகத்தை காண மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

சத்தியத்தின் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது, மக்கள் குவிய காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள இந்த அருங்காட்சியகம் தொழிலதிபர் லெக் வீரியப்பனால் வடிவமைக்கப்பட்டது

அருங்காட்சியகக் கட்டமைப்பு ஒரு கோவில் போன்றும் கோட்டை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மரத்தால் செதுக்கப்பட்ட சிலைகள் மற்றும் சிற்பங்கள் மட்டுமே இதில் உள்ளன.

கட்டுமானம் முதன்முதலில் 1981 இல் தொடங்கியது. ஆனால் இன்னும் கட்டுமானத்திலேயே உள்ளது. இருந்தாலும் பார்வையாளர்கள் கடினமான தொப்பிகளுடன் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

13 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் கட்டமைப்பின் மேற்பரப்பில் தாய் , இந்து , புத்த , சீன , மற்றும் கெமர் மரபுகளை பிரதிபலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் அயுத்தயாவில் உள்ள கோயில்களால் ஈர்க்கப்பட்டு இந்த மர அமைப்பு கட்டிடக்கலை வடிவமைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அருங்காட்சியகம் அதன் தூண்கள் முதல் படிக்கட்டுகள் வரை மரச் செதுக்கலின் கலைத்திறனுக்கு சான்றாக உள்ளது. அந்த கட்டமைப்பு முழுவதும் நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

என்னதான் இந்த அருங்காட்சியகம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், அந்த கட்டிக்கலையை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அவர்களுக்கு கூடுதல் அனுபவத்தை கொடுக்க தாய் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலதர விஷயங்கள் இங்கு நடத்தப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?