``இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள்... அதனால் அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என அமெரிக்கவாழ் இந்தியப் பெண்களிடம் ஒரு அமெரிக்க பெண் வாக்குவாதம் செய்து, அவர்களைத் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? உண்மையில் இந்தியர்கள் அமெரிக்காவில் அதிகமாக குவிகின்றனரா?
அமெரிக்காவின் மக்கள் தொகையில் 1 விழுக்காடு இந்தியர்கள் இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? மற்ற எந்த நாட்டையும் விட அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆவதே இந்தியர்களுக்கும் விருப்பமானதாக இருக்கிறது.
வேலைக்காக அங்குச் சென்று வாழ்வதை விட, அங்கு குடியுரிமைப் பெற்று வாழும் இந்தியர்களும் அதிகரித்து வருகின்றனர். அதையும் விட அரசுத் துறைகளில் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது இருக்கும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கியப் பணிகளில் இருக்கின்றனர்.
தற்போது அதிபர் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் இந்திய அமெரிக்கர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். வெள்ளை மாளிகையில் முக்கியக் கூட்டங்களில் இந்திய அமெரிக்கர்கள் பங்கு பெறுகின்றனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரெனால்டு ரீகன் முதன்முதலாக இந்திய அமெரிக்கர்களை அரசு நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தினார்.
பராக் ஒபாமா 60க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை தனது அரசு நிர்வாகத்தில் நியமித்திருந்தார்.
டொனால்டு ட்ரம்ப் 80க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கியப் பொறுப்பு அளித்திருந்தார்.
இவர்கள் அனைவரையும் விஞ்சும் படியாக ஜொ பைடன் 130 அமெரிக்க இந்தியர்களை நியமித்திருக்கிறார்.
இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்று வரலாறு படைத்துள்ளதை நாம் அறிவோம். அவரைத் தவிர பல இந்தியர்கள் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் ஜோபைடன் பேசுவதை எழுதும் நபராக அரசியல் ஆலோசகர் வினய் ரெட்டி பதவி வகிக்கிறார். கொரோனா ஆலோசகராக ஆஷிஷ் ஜா உள்ளார். பருவநிலை மாற்ற ஆலோசகராக சோனியா அகர்வால் உள்ளார்.
குற்றவியல் நீதித்துறை சிறப்பு ஆலோசகராக சிராக் பெயின்ஸ், பணியாளர் நிர்வாக அலுவலகத்தின் தலைவராக கிரண் அகுஜா, மருந்து கட்டுப்பாட்டு ஆலோசகராக ராகுல் குப்தா ஆகியோர் உயர்பதவிகளில் உள்ளனர்.
மேலும், அமெரிக்க அரசின் துணை செய்தித் தொடர்பாளராக வேதாந்த் படேல் உள்ளார். அமெரிக்க அதிபர் மனைவி அலுவலகத்தின் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வர்மா உள்ளார். இந்திய அமெரிக்கர்கள் பலரை முக்கிய தூதர் அந்தஸ்திலான பதவிகளிலும் ஜோ பைடன் நியமித்துள்ளார். மேலும், கடந்த 2020-ம் ஆண்டில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர் வரலாறு படைத்தார்.
கூகுள் நிறுவனத்தை சுந்தர் பிச்சை வழிநடத்துகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சத்ய நாதெல்லா வழிநடத்துகிறார். அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண், ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், டெலாய்ட் நிறுவனத்தின் புனித் ரெஞ்சன், ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் ராஜ் சுப்பிரமணியம் உட்பட இந்திய அமெரிக்கர்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களை வழி நடத்துவது குறிப்பிடத்தக்கது.
2020 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று உறுதியளித்தார் அதிபர் ஜோ பைடன். அமெரிக்கா, அரபு எமிரேட்ஸ் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு கணிசமானது. இவர்களது வளர்ச்சிக்கு உதவும் இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரமும் மிக அத்தியாவசியமானது. இப்போது இந்தியர்களை வெறுப்பதாக கூறிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இனவெறிக்காரர்களின் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் கவலைக்கிடமான நிலைமை உருவாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust