அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டட் யூத்’ (சிடிஒய்).
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி புத்திசாலி மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
76 நாடுகளில் 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் தரநிலை சோதனைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தேர்வில் நடாஷா அனைத்து மாணவர்களை விடவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.
2021ஆம் ஆண்டுக்கான போட்டியிலும் கலந்துகொண்ட நடாஷா அப்போதும் முதல் இடத்தைப் பெற்றிருந்தார். இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நடாஷா நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார். இவரது பெற்றோர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
நடாஷாவுக்கு ஓவியங்கள் வரைவதும் ஜே.ஆர்.ஆர். டோல்கீன் நாவல்களைப் படிப்பதும் பிடித்தமானவை என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.
ஜான் ஹாப்கின்ஸ் மையத்தின் இந்தப் போட்டி உலக அளவில் பல நாடுகளின் திறன் வாய்ந்த மாணவர்களைக் கண்டுபிடித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இவருக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust