வியாழன் Twitter
உலகம்

“இது தான் நாசா சுட்ட தோச” - வியாழன் கோளின் படத்தை கலாய்த்த நெட்டிசன்கள்

Antony Ajay R

நாசா எடுத்த வியாழன் கோளின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. லேட்டஸ்ட் இன் ஸ்பேஸ் என்ற பக்கத்தில் இந்த படம் வெளியிடப்பட்டிருந்தது. “வியாழன் கோளில் அடிப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். நாசாவின் கசினியால் எடுக்கப்பட்டது” என அந்த புகைப்படத்தில் தலைப்பிடப்பட்டிருந்தது. 19,600க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 2000 பேருக்கு மேல் ரீட்விட் செய்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் கணப்பொழுதில் இது பார்க்க ஒரு தோசையைப் போல இருக்கிறது எனக் கூறி வருகின்றனர். அந்த படமும் வெள்ளை மாவும் மொறு மொறுப்பு பகுதியில் கலந்த தோசை போலவே இருந்தது. ஒருவர் இது ஸ்பெஷல் தோசை எனவும் மற்றொருவர் இது அம்மா சுட்ட தோசை போல இருக்கிறதே எனவும் கமெண்ட் அடித்து கலாய்க்க, இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

கசினி எனும் நாசாவின் விண்கலம் தான் இந்த புகைப்படத்தை எடுத்தது. சனி கோள் குறித்து பல்வேறு முக்கியத்தகவல்களை கசினி திரட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. “சனியின் நிலவுகள் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் தனித்துவமான உலகங்களாக இருக்க வேண்டும்” என கண்டறிந்தது கசினி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?