மொபைல் ஃபோன் இல்லாமல் ஒருநளை உங்களால் செலவழிக்க முடியுமா? நீங்கள் முடியும் என்றாலும் அது எளிமையானது இல்லை என்பதே நிதர்சனம்.
நாம் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் நாம் மொபைலின் திரைகளையேப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மெஸ்ஸேஜ் செய்வது, சமுக வலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, படங்கள், வீடியோக்கள் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் நாம் மொபைலின் திரைகளையேப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மொபைலை கண்டுபிடித்த பொறியாளர் மொபைல் பயன்பாடு குறித்து "யாரோ ஒருவர் தெருவைக் கடந்து செல்போனைப் பார்ப்பதைக் கண்டு நான் நொறுங்கிப் போகிறேன். அவர்கள் மனம் விட்டுப் போய்விட்டார்கள்" எனக் கூறியிருக்கிறார்.
மார்டின் கூப்பர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரை மொபைலின் தந்தை எனக் கூறுகின்றனர்.
1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி கூப்பர் உலகின் முதல் மொபைல் அழைப்பை மேற்கொண்டார்.
"எல்லாரும் மொபைல் ஒரு வெறியுடன் பயன்படுத்துகின்றனர்" எனக் கூறிய அவர் அதன் நேர்மறை விளைவுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
மொபைல்ஃபோனுக்கு இருக்கும் ஆற்றல் அபரிமிதமானது. கல்வி மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டத் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என கூப்பர் கூறியுள்ளார்.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளில் ஒரு நோயை குணப்படுத்தும் சக்தியுடையதாக மொபைல் போன் இருக்கும் என்றுள்ளார்.
இப்போது வெளியாகும் புதியவை செல்ஃபோன்கள் அனைத்தையுமே கூப்பர் பயன்படுத்துப்பார்கிறாராம். "என் பேரக்குழந்தைகள் செல்ஃப்னை எப்படி உபயோகிப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை" என மொபைலின் பரிணாமம் குறித்து வியந்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust