தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் $24 பில்லியன் மதிப்பிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் ஸ்டீவ் சிங்வாரு என்ற ஆராய்ச்சியாளர் உள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பேசின் சுரங்கக் குப்பைகளுக்குள் மறைந்திருந்த சுமார் 420 டன் கண்ணுக்குத் தெரியாமல் தங்கம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
டெயிலிங்ஸ் என குறிப்பிடப்படும் ஜோகன்னஸ்பர்க்கின் புகழ்பெற்ற தங்க சுரங்கம் 1886 ஆம் ஆண்டுக்கு முந்தையவை. தொடர்ச்சியாக அங்கு தங்கம் எடுக்கப்பட்ட போதிலும், சுமார் 30 சதவிகித தங்கத்தை மட்டுமே எடுக்க முடிந்துள்ளது, இன்னும் 70 சதவிகிதம் தீண்டப்படாமலே உள்ளது.
சிங்வாருவின் கண்டுபிடிப்புகள், தங்கத்தின் பெரும்பகுதி பைரைட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.
தொழில்நுட்ப மற்றும் பொருளாதார காரணிகளால் ஏற்படும் தடைகள் இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்க சுரங்க நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews