Atlantis Twitter
உலகம்

அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

NewsSense Editorial Team

அட்லாண்டிஸ் நகரம் என்பது பண்டைய கிரேக்க நாட்டில் உள்ள ஒரு கற்பனையான தீவு நகரமாகும். இது பிளாட்டோவின் படைப்புகளில் உள்ள நாடுகளின் பெருமை பற்றிய கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கதையில், ஏதென்ஸ் நகரம் அட்லாண்டியன் தாக்குதலைத் தடுக்கிறது. இறுதியில் அட்லாண்டிஸ் நகரம் தெய்வங்களின் ஆதரவை இழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி விடுவதுடன் கதை முடிகிறது.

பெர்முடா முக்கோண மர்மக் கடல் பகுதி முதல் பல மர்மங்களில் அட்லாண்டிஸ் புராணக் கதையை மக்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் ஆழ்கடல் மூழ்குபவர்கள் பசிபிக் கடல் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அது அட்லாண்டிஸுக்கு செல்லும் பாதையா என்று தற்போது சதிக் கோட்பாட்டு வாதிகளால் விவாதிக்கப்படுகிறது.

இந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது பண்டைய தொலைந்து போன நகரமான அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆழ்கடல் பயணக் குழுவின் நேரடி காட்சிகள் கடந்த மாதம் ஆன்லைனில் எக்ஸ்ப்ளோரேஷன் வெசல் நாட்டிலஸ் குழுவினரால் வெளியிடப்பட்டது. இது விசித்திரமான தோற்றமுடைய மஞ்சள் பாதையைக் காட்டியது.

அட்லாண்டிஸ் வரைபடம்

கற்களால் அமைக்கப்பட்ட சாலையை ஒத்த விசித்திரமான தோற்றமுடைய அமைப்பை அந்தக் காட்சிகள் காட்டியது.

நேரடி டைவ் காட்சிகளைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள் அதை "மஞ்சள் செங்கல் சாலை" மற்றும் "அட்லாண்டிஸுக்கு செல்லும் சாலை" என்று விவரித்தனர். மேலும் அந்தப் பாதையை வினோதமான, குளிர் நிறைந்த மற்றும் பைத்தியக்காரத்தனமான காட்சி என்றும் அழைத்தனர்.

நம்பமுடியாத இந்த பாறை உருவாக்கம் ஹவாய் அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள Papahānaumokuakea கடல் தேசிய நினைவுச்சின்னத்தில் (PMNM) கண்டறியப்பட்டது.

PMNM என்பது உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான முழுமையான பாதுகாக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதி ஆகும்.

அறிக்கைகளின்படி, PMNM பகுதிகள் பசிபிக் பெருங்கடலின் 582,578 சதுர மைல்களை உள்ளடக்கியது. இது அமெரிக்காவின் அனைத்து தேசிய பூங்காக்களையும் விட பெரிய பகுதி.

இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் அதன் கடற்பரப்பில் மூன்று சதவீதத்தை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர்.

டெய்லி மெயில் பத்திரிகையின்படி, "இது அட்லாண்டிஸுக்கான பாதை" என்று வானொலியில் ஒரு ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

"மஞ்சள் செங்கல் சாலை?" என்று மற்றொருவர் அதை நகைச்சுவையாகஅழைத்தார். அதே நேரத்தில் ஒரு ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் அதை "வினோதமானது" என்று கூறுகின்றனர்.

Plato

'மஞ்சள் செங்கல் சாலை' உண்மையில் பண்டைய இயற்கை நிகழ்வில் உள்ள எரிமலை புவியியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அந்த ஆராய்ச்சிக் குழு கூறியது.

ஒரு அறிக்கையில் அந்த ஆய்வுக் குழு, "எங்கள் ஆய்வுக் குழு, பாபஹானமோகுவாக்கியா கடல் தேசிய நினைவுச்சின்னத்திற்குள் உள்ள லிலியுகலானி ரிட்ஜில் ஆழ்கடல் ஆய்வு செய்த போது நம்பமுடியாத தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான புவியியல் அமைப்புகளைக் கண்டுள்ளது," என்று கூறியது

'சீமவுண்ட் சங்கிலி முழுவதும், குழு பல்வேறு ஆழங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல்களில் இருந்து ஃபெரோமாங்கனீஸ் (இரும்பு-மாங்கனீசு) மேலோடு பூசப்பட்ட பாசால்ட்களையும், அதே போல் கிட்டத்தட்ட ஒரு கடற்பாசியை ஒத்த ஒரு சுவாரஸ்யமான தோற்றமுடைய பியூமிஸ் பாறையையும் மாதிரியாக எடுத்தது.'

இந்த ஆய்வுக் கப்பலை லாப நோக்கற்ற கடல் ஆய்வு அறக்கட்டளை இயக்குகிறது. இது தொலைதூரத்தில் இயக்கப்படும் டைவிங் வாகனங்கள் ஆழத்தில் என்ன பார்க்கின்றன என்பதை நேரடியாக ஒளிபரப்புகிறது.

Atlantis

பசிபிக் கடல் பிராந்தியத்தில் இயற்கையாக இருக்கும் பார்ப்பதற்கு மஞ்சள் வண்ண தோற்றத்தில் இருக்கும் இரும்பு மாங்கனீசு மேலோடு பூசப்பட்ட பாறைத்துண்டுகளின் தொடர்ச்சியை வைத்து இது அட்லாண்டிசுக்கு செல்லும் கடல் பாதை என்று சதிக் கோட்பாளர்கள் கதையளக்கின்றனர்.

வானத்தில் சில நேரம் மேகங்களின் அமைப்பு நமது கற்பனைக்கு ஏற்றவாறு சில உருவகங்களை காட்டலாம். அதை வைத்து அந்த உருவங்களை பேய் என்றோ கடவுள் என்றோ கூறுவது எவ்வளவு அபத்தமோ அது போன்றதொரு அபத்தம்தான் இந்த அட்லாண்டிஸ் பாதை. இயற்கையான புவியியல் அமைப்பை நமது கற்பனை கதைகளுக்கு பொருத்திப் பார்க்கும் வழக்கம் உலகெங்கும் இருக்கிறது.

அறிவியல் உலகம் இதைப் பற்றி எவ்வளவு விளக்கினாலும் அதை மர்மம் என்று நம்புவதற்கு இன்றும் பலர் இருக்கிறார்கள், அவ்வளவே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?