சீன பெருஞ்சுவர் உலகிலேயே மிகவும் நீளமான சுவர் என கூறப்படுகிறது. உலகின் மிகச் சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் சீன பெருஞ்சுவர் உள்ளது.
இந்த சீன பெருஞ்சுவரின் வரலாற்றை திரும்பி பார்த்தால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கின் வம்சத்தின் போது தொடங்கியது. அடுத்தடுத்த வம்சங்கள் தங்கள் கோட்டைகளை வலுவாக்க சீன பெருஞ்சுவரை பல ஆண்டுகளாக கட்டினர்.
பல்வேறு பொருட்களால் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவர் கரடுமுரடான நிலப்பரப்பு, மலைகள், பாலைவனங்கள் மற்றும் புல்வெளிகள் வழியாக செல்கிறது.
இதன் கட்டுமானத்திற்கு பல நூற்றாண்டுகளாக மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்பட்டது. சீன பெருஞ்சுவர் வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டுமானத்தில் ஒன்றாக உள்ளது
சீனப்பெருஞ்சுவர் மனிதனால் 21,219 கி.மீ தொலைவிற்கு கட்டப்பட்ட ஓர் சிறந்த கட்டமைப்பாகும்.
இந்த நிலையில் சீன பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்க்க முடியும் என்ற செய்தியும் நம்பிக்கையும் சீன மக்களிடையே உள்ளது.
ஆனால் உண்மையில் விண்வெளியிலிருந்து நம்மால் சீனப்பெருஞ்சுவரை காண முடியாது. சீனப்பெருஞ்சுவர் விண்வெளி மையங்களில் இருந்து தெளிவாக தெரிவதில்லை என்று விண்வெளி வீரர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் 2004 ஆண்டு லென்சை பயன்படுத்தி சீனப்பெருஞ்சுவரை அமெரிக்க விண்வெளி வீரர் லிராய் சாவோ எடுத்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
ஆகவே பூமியில் அப்போது நிகழும் பருவநிலை மாற்றம், விண்வெளியில் இருந்து சீன பெருஞ்சுவரை படம்பிடிக்க பயன்படுத்தபடும் கேமராவை பொறுத்தும் சீன பெருஞ்சுவரை காணமுடியும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust