Israel - Hamas: குடியிருப்பு, மருத்துவமனை, முகாம்களில் தாக்குதல்! கசா மக்களின் நிலை என்ன? Twitter
உலகம்

Israel - Hamas: குடியிருப்பு, மருத்துவமனை, முகாம்களில் தாக்குதல்! கசா மக்களின் நிலை என்ன?

இஸ்ரேல் படைகள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கசா பகுதிக்கு மின்சாரத்தைத் துண்டித்துள்ளது இஸ்ரேல். கசா பகுதிக்கு செல்லும் உணவு, எரிபொருள், மின்சாரம் அனைத்தும் நிறுத்தப்படும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Antony Ajay R

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் சிக்கிய கசா பகுதி மக்கள் கற்பனைக்கு எட்டாத வண்ணம் பாதிப்படைந்துள்ளனர்.

ஹமாஸ் ஆயுத படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகிறது கசா.

ஹமாஸ் பெரிய அளவில் தாக்குதலை தொடத்தது முதல் ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த மக்களின் நிலை இன்னும் பாதிப்படைந்திருக்கிறது.

சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது முதல் இஸ்ரேலில் போர் சூழல் எழுந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் தாக்குதலுக்கு கடுமையான எதிர்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேல். திங்கள் கிழமை கசாவின் 130 இலக்குகளில் ஏவுகணை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பகலிலும் இரவிலும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்கள் தொகை அடர்ந்த பகுதிகளில் கூட இஸ்ரேலின் ஏவுகணைகள் வெடிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை கூறுவதன்படி இப்போதைய மோதலைத் தவிர்த்து, 2008 முதல் நடைபெற்றுவரும் மோதல்களில் 300 இஸ்ரேலியர்களும் 6,400 பாலஸ்தீனியர்களும் இறந்துள்ளனர்.

இப்போதைய மோதலில் பாலஸ்தீன அதிகாரிகள் கூறுவதன்படி, கசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் 1055 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 5,184 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 1200 பேர் வரை மரணித்திருக்கலாம் என்றும் 2,900 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாலஸ்தீன குழந்தைகளுக்கான வழக்குரைஞர் குழு, 33 பாலஸ்தீன் குழந்தைகள் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிறுப்புகளும் வீடுகளும் அகதி முகாம்களும் இஸ்ரேலின் இராணுவத்துக்கு இலக்காகியிருக்கின்றன.

ஐநா கூறுவதன்படி, 1,23,000 பேர் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். 73,000 பேர் பள்ளிகளில் தங்கியிருக்கின்றனர்.

காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கமுடியாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் வருவதை இஸ்ரேல் தடுத்துவைத்துள்ளது.

Beit Hanoun Hospital

கசா மருத்துவத் துறையினர் இஸ்ரேல் படைகள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கசா பகுதிக்கு மின்சாரத்தைத் துண்டித்துள்ளது இஸ்ரேல்.

கசாவின் பிரதான மருத்துவமனையான Beit Hanoun மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் அடுத்தடுத்து குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் மருத்துவமனை இப்போது செயல்படவில்லை எனவும் ஹமாஸ் அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தகவல் தொடர்பு மையங்களையும் இஸ்ரேல் அழித்துள்ளது. இதனால் இணைய சேவைக்கும் மொபைலில் பேசவும் முடியாமல் தவித்து வருகின்றனர் கசா மக்கள்.

இஸ்ரேலில் இருப்பது போல வான்வெளி தாக்குதலை எச்சரிக்கும் அமைப்புகள் அல்லது வெடிகுண்டு பாதுகாப்பு தங்குமிடங்கள் எதுவும் கசாவில் கிடையாது.

இதனால் காயப்படும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகளோ, ஜெனரேட்டர் வசதியோ இல்லை.

கசா பகுதிக்கு செல்லும் உணவு, எரிபொருள், மின்சாரம் மற்றும் பிற தேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1960களில் கிழக்கு ஜெருசலேம், ஜோர்தான் நதியின் மேற்குக் கரை (West Bank) மற்றும் காசா ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது மற்றும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது உள்ளிட்ட நில உரிமைத் தொடர்பான பிரச்னைகள் இப்போது வெடித்திருக்கின்றன. 2007 முதல் எகிப்து மற்றும் இஸ்ரேல் இணைந்து கசா பகுதியை முற்றுகையிட்டன.

கடந்த 2008 முதல் இஸ்ரேல் பலமுறை கசா பகுதியை தாக்கியுள்ளது. சில தாக்குதல்கள் நவீன ஆயுதங்களை சோதிப்பதற்காக நடத்தப்பட்டவை என்ற தகவலும் கூறப்படுகிறது.

ஐநா சபை கூறுவதன்படி, கசா பகுதியில் 81% மக்கள் வறுமையில் உள்ளனர். 63% மக்கள் உணவு பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். சுத்தமான குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் எப்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது.

மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என tdh என்ற முன்னணி சுவிஸ் குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குடிமக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அவசரகால முகாம்கள் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் இராணுவ இலக்காக மாறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?