மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து ஹமாஸ் வீரரை தீர்த்துக்கட்டிய இஸ்ரேல் இராணுவம்!
மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து ஹமாஸ் வீரரை தீர்த்துக்கட்டிய இஸ்ரேல் இராணுவம்! Twitter
உலகம்

மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து ஹமாஸ் வீரரை தீர்த்துக்கட்டிய இஸ்ரேல் இராணுவம்!

Antony Ajay R

இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள வெஸ்ட் பேங் (மேற்கு கரை) பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் 10 பேர், மருத்துவ ஊழியர்கள் போலவும், இஸ்லாமிய பெண் போலவும் மாறுவேடத்தில் நுழைந்து 3 பாலஸ்தீனிய படையினரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதில் ஒருவர் கை, கால்கள் முடங்கி படுக்கையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷின் பெட் பாதுகாப்பு சேவை மற்றும் எல்லை போலீஸ் இணைந்து இந்த அண்டர்கவர் ஆப்பரேஷனை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்த மூவரில் ஒருவர் ஹமாஸ் அதிகாரி எனவும் மற்ற இருவரும் இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பைச் சேர்ந்த வீரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இறப்புகளை உறுதிப்படுத்திய பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் "ஆக்கிரமிப்பாளர்கள் மருத்துவமனைகளுக்குள் புதிய படுகொலையை நடத்துகிறார்கள்" என குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை மருத்துவமனைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இஸ்ரேல் தரப்பில் மருத்துவ மனைகளில் இருக்கும் சுரங்கப்பாதைகள் பயங்கரவாதத்துக்கு மறைவிடமாக மாறிவிடக் கூடாது எனக் கூறப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறம் நோயாளிகள் மறுபுறம் இருக்கும் இடத்தை போர்க்களமாக மாற்ற விரும்பாததால் மாறுவேடத்தில் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?