Presicce  Twitter
உலகம்

Presicce : புதிதாக குடியேறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் ஒரு ஊர் - ஏன் தெரியுமா?

Antony Ajay R

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள ஒரு அழகான நகரத்தில் குடியேற விரும்பும் நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் கொடுக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என சிலர் புருவம் உயர்த்தினால்... நிச்சயமாக இருக்கிறது. ப்ரெஸ்ஸிசே என்ற அந்த ஊருக்கு 'பேய் கிராமம்' என்ற பெயரும் உள்ளதாம்.

தென் கிழக்கு இத்தாலியில் இருக்கும் இந்த ஊருக்கு மீண்டும் உயிரூட்டத்தான் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு.

இதன் உள்ளூர் கவுன்சிலரான ஆல்ஃபிரடோ பலீஸ், "வரலாற்றுப் சிறப்புமிக்க இந்த நகரில் 1991க்கு முன்னர் உருவான ஏராளமான வீடுகள் இப்போது காலியாக உள்ளன. இதனை புதிய மக்களுடன், புத்துயிருடன் காண ஆசைப்படுகிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

இந்த நகருக்கு வருபவர்களுக்கு 30,000 யூரோ வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 25,00,000 ரூபாய். இதனைக் கொண்டு இங்கு 500 சதுர அடி அளவிலான வீட்டை வாங்கவும், தேவைப்பட்டால் மறுசீரமைப்பு செய்யவும் முடியும்.

ப்ரெஸ்ஸிசேவிலிருந்து 15 நிமிட தூரத்தில் தான் இத்தாலியின் அழகு பொழியும் கடற்கரைகள் இருக்கிறது.

இந்த வீடுகளை வாங்க ஒரு நிபந்தனை இருக்கிறது. நீங்கள் சுற்றுலாப் பயணியாகவோ அல்லது தற்காலிகமாக குடியிருப்பவராகவோ இருக்கக் கூடாது, முழு நேரமாக இங்கு குடியேற விரும்புபவர்களுக்கு மட்டுமே ப்ரெஸ்ஸிசே தனது கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.

இப்போது ப்ரெஸ்ஸிசேக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ள 9000 மக்கள் அங்கு வசிக்கிறார்கள். அவர்களில் பாதிபேர் ஒதுக்குபுறமான இடங்களிலேயே தங்குகின்றனர். பொதுவாக இந்த மாதிரி கைவிடப்பட்ட ஊர்கள் பேய் ஊர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?