ஜப்பான் : டோங்கா - கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை, பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

 

News Sense

உலகம்

ஜப்பான் : டோங்கா - கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை, பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக் கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான். இந்நிலையில் இந்தத் தீவுகள் தேசத்தில் கடலுக்கு அடியில் ஹுங்கா ஹா அபாய் என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது.

Prasanna Venkatesh S

ஐப்பானின் தெற்குக் கரையோரத்தை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பசிபிக் கரையோரமாக உள்ள ஜப்பானின் மற்ற சில பகுதிகளிலும் சிறிய அளவிலான அலைகள் பதிவுசெய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டோங்கா - கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை

டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக் கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான். இந்நிலையில் இந்தத் தீவுகள் தேசத்தில் கடலுக்கு அடியில் ஹுங்கா ஹா அபாய் என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது.

Tonga Tsunami

ஃபிஜி வரை கேட்ட சத்தம்

இந்த எரிமலை வெடித்துச் சிதறும் சத்தம் தெற்கு பசிபிக் பிராந்தியம் முழுவதும் கேட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மக்கள் இந்த சத்தத்தைக் கேட்டுள்ளனர். டோங்கோவில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருந்த ஃபிஜியிலும் எரிமலை வெடிக்கும் சத்தம் கேட்டது.

வெடிகுண்டு என நினைத்தேன்

கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியவுடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குள், எல்லா இடங்களிலும் புகையும், சாம்பலும் சூழ்ந்தது. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.


இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நான் ஏதோ வெடிகுண்டு வெடித்தது என்றே நினைத்தேன். ஆனால் அப்புறம் தான் நிலைமையை உணர்ந்தோம்," என்றார்.

சித்தரிப்புக்காக

ஜப்பானில் சுனாமி


இந்த நிலையில் இன்று ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐப்பானின் தெற்குக் கரையோரத்தை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Amami, Tokara தீவுகளை 3 மீட்டர் உயர அலைகள் தாக்கலாம் என்று ஜப்பானின் வானிலை நிலையம் எச்சரித்தது.

கிழக்குக் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களைக் கடற்கரைகள், ஆறுகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கும்படியும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?