Juliette Lamour Twitter
உலகம்

Juliette Lamour : 18 வயதில் 300 கோடிக்கு அதிபதி - இளம் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!

Priyadharshini R

18 வயதான ஜூலியட் லாமோர் தனது முதல் முயற்சியிலேயே $48 மில்லியன் ( இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய்) லாட்டோ ஜாக்பாட்டை வென்றார், இவ்வளவு பெரிய பரிசை வென்ற நாட்டிலேயே இளையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழக மாணவரான லாமோர், தனது படிப்பை முடித்து மருத்துவராவதற்கு திட்டமிட்டுள்ளார்.

மானியங்கள் அல்லது கடன்களைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவராகும் தனது கனவை நிறைவேற்ற ஜூலியட் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்

Lottery Ticket

ஒரு மொபைல் செயலி மூலம் லாமோர், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டைப் பார்க்கச் சென்றபோது, ​​​​ஒரு ஜிங்கிள் ஒலிக்கத் தொடங்கியது, பின்னர் "பிக் வின்னர்" திரையில் பளிச்சிட்டது.

அருகில் இருந்தவர்கள் லாமோர் $48 மில்லியன் பெரும் தொகையை வென்றதாக கூச்சலிட்டனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"நான் மகிழ்ச்சியில் அழுது கொண்டிருந்தேன், நான் முதமுறையாக லாட்டரி சீட்டு வாங்கியதிலேயே, கோல்ட் பால் ஜாக்பாட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை"

ஜூலியட் தனது தந்தையின் உதவியுடன் ஜாக்பாட்டின் பெரும்பகுதியை "கவனமாக" முதலீடு செய்வதாக கூறினார்.

கல்லூரி முடிந்ததும், நானும் எனது குடும்பத்தினரும் ஒரு கண்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யத் தொடங்குவோம் என்று அவர் வேடிக்கையாக கூறினார்.

"நான் வெவ்வேறு நாடுகளுக்கு செல்லவும், அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் படிக்கவும், அவர்களின் உணவு வகைகளை ருசிபார்க்கவும், அவர்களின் மொழியைக் கேட்கவும் விரும்புகிறேன்” என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?