Pet kitten Youtube
உலகம்

பூனையை தண்ணீரில் தள்ளிவிட்டவர் கைது - எத்தனை வருட சிறை தண்டனை தெரியுமா?

இந்த கொடூரச் செயலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவ, விரைந்தது விலங்குகள் பாதுகாப்புக் குழு. இச்செயலைப் புரிந்த நபரை கைது செய்துள்ள க்ரேக்க நாட்டுக் காவல் துறை, அந்நபருக்கு தண்டனையும் வழங்கவுள்ளது

Keerthanaa R

எல்லை மீறும் மிருக சித்திரவதைகள், வித விதமாக உருவெடுக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே உலகின் பல மூலைகளில் நடந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன. உணவகத்திற்கு அழைத்து வரப்பட்ட செல்லப் பிராணியைத் தண்ணீரில் தள்ளிவிட்ட ஒரு கிரேக்க நாட்டு நபரின் செயல், பார்த்த பலரின் மனதை பதைபதைக்கச் செய்துள்ளது.

முன்பு வீடுகளில் மட்டுமே வைத்து செல்லம் கொஞ்சப்பட்ட பிராணிகளை இப்போது வெளியிலும், முக்கியமாக உணவகங்களுக்கும், அழைத்துச் செல்கின்றனர், வளர்ப்பவர்கள். அதேபொல ஓர் உணவகத்திற்கு அழைத்துவரப்பட்ட இரு பூனைக்குட்டிகளை இறை காண்பித்து இழுத்து, அதில் ஒன்றைத் தண்ணீரில் தள்ளிவிட்டிருக்கிறார் அந்நபர்.

Kittens

இவரின் இச்செயலைக் கண்டு, இவருடன் இருந்தவர்கள் மட்டும் பாராட்ட, சுற்றியிருந்தவர்களின் முக சுளிப்புக்கும் உள்ளாகினர். எனினும், இக்கொடுமையைக் காணச் சகிக்காத சிலர், இதை காட்சிப்பிடித்து பதிவேற்ற, சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவிய வீடியொவை வைத்து, விலங்குகள் நல குழுவினர் அங்கு விரைந்து, அந்த மனிதரைக் கைதும் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மேல் உள்ள புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இவருக்கு 42,000 யூரொக்கள் அபராதம் விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும். க்ரீஸ் நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பு அமைச்சர், டாகிஸ் தியொடோரிகாகோஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கைது செய்யப்பட்ட செய்தியை உறுதி செய்திருந்தார்.

Cat being lured to edge using bait

அவர் கூறியதாவது, "பிராணிகளுக்கு எதிரான எச்செயலையும் ஏற்க இயலாது. பூனைக்குட்டியைத் தண்ணீரில் தள்ளிவிட்டவரைக் கைதும் செய்தாயிற்று. விலங்குகளைப் பாதுகாக்க கடும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், இச்செயல் ஒருவரது மனிதத்தைக் குறிக்கும் செயலாகும்."

விலங்குளை சித்திரவதைக்கு உள்ளாக்குபவர்கள், அதற்குத் துணை நிற்பவர்கள் என சிலரது செயல்கள் அவரது மனதை நெருடச்செய்வதாகவும், இந்த விஷயத்தைச் சிறிதும் தாமதிக்காது, தட்டி கேட்டவர்களுக்கு, பாராட்டையும் தெரிவித்திருந்தார் அமைச்சர் தியொடோரிகாகோஸ்

மேலும், அந்த பூனைக்குட்டிகளின் காப்பாளர் அவை நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?