Instagram-ல் மெஸ்ஸி வீழ்த்திய முட்டை - ஒரு வினோத செய்தி
Instagram-ல் மெஸ்ஸி வீழ்த்திய முட்டை - ஒரு வினோத செய்தி Twitter
உலகம்

Instagram-ல் மெஸ்ஸி வீழ்த்திய முட்டை - ஒரு வினோத செய்தி !

Antony Ajay R

36 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி.

உலகக் கோப்பை தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடியதால் கோல்டன் பால் விருதையும் அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பையை கையில் தூக்கியபடி அவர் பதிவிட்ட புகைப்படம் 5.7 கோடி லைக்குகளைப் பெற்றுள்ளது.

இறுதிப்போட்டி மற்றும் கொண்டாட்டத்தின் 10 புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவின் மூலம் முந்தைய சாதனையாளரான பழுப்பு நிற முட்டையை தோற்கடித்துள்ளார் மெஸ்ஸி.

அது என்ன முட்டை?

முன்னதாக அதிக லைக்குகளை பெற்றுள்ள புகைப்படம் என்ற பெருமை ஒரு முட்டைக்கு இருக்கிறது.

முதன் முதலில் இந்த முட்டை கணக்கு உருவாக்கப்பட்ட போது பிரபலங்களுக்கு எதிராக அதிக லைக்குளைப் பெறும் போராட்ட நடவடிக்கையாக மக்கள் இதில் லைக் செய்ய வலியுறுத்தப்பட்டனர்.

அப்போது கைலி ஜென்னர் அதிக லைக்குகளை பெற்ற நபராக இருந்தார். அவர் தனது குழந்தையை அறிமுகம் செய்த புகைப்படத்துக்காக 1.8 கோடி லைக்குகள் கிடைத்திருந்தது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் அதிகம் ஃபாலோ செய்யப்படும் நபர்களில் மெஸ்ஸியை விட முன்னிலையில் இருந்தார்.

இப்போது மெஸ்ஸி 403 மில்லியன் ஃபாலோவர்களுடன் 2வது அதிகம் பின் தொடரும் நபராக இருக்கிறார். முதலிடத்தில் ரொனால்டோ இருக்கிறார்.

சரி, முட்டையின் கதைக்கு வருவோம்...

@world_record_egg என்ற கணக்கில் பதிவிடப்பட்ட முட்டை தான் அந்த சாதனைக்கார முட்டை.

முதலில் இது பெரிய நிறுவனம் ஒன்றின் கணக்கினை வாங்கி செய்யப்பட்ட தந்திரம் எனக் கூறினர்.

ஆனால் பிரிட்டிஷ் விளம்பர நிபுணர் க்றிஸ் காட்ஃப்ரி இன்னும் இருவருடன் இணைந்து இதனை உருவாக்கியதாகக் கூறினார்.

அதிகமான லைக்குகளை பெறுவது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த முட்டை கைலி ஜென்னரின் சாதனையை அதிக வேறுபாட்டில் முந்தியது. இப்போது வரை 5.6 கோடி லைக்குகளைப் பெற்றிருக்கிறது.

இப்போது முட்டையை மெஸ்ஸி வென்றிருக்கிறார்.

மெஸ்ஸியின் சாதனைகள்

உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு மெஸ்ஸி படைத்த சில சாதனைகள்,

உலகக் கோப்பைகளில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்றவர். மொத்தம் 11 விருதுகள்.

உலகக் கோப்பைகளில் அதிக முறை கேப்டனாக அணியை வழிநடத்தியவர். 19 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

அதிக உலகக் கோப்பைகளில் பங்கேற்ற ஆண் வீரர். 5 உலக கோப்பைகளில் வென்றிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?