List Of Most Expensive Things That Exist In The World Twitter
உலகம்

உலகில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ!

Priyadharshini R

உலகில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் பற்றியும் அதன் மதிப்பு என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

ஹிஸ்டரி சுப்ரீம்

ஹிஸ்டரி சுப்ரீம் என்பது ஒரு ஆடம்பர படகு ஆகும். இதன் உரிமையாளர் மலேசியாவில் உள்ளார். பிரிட்டிஷ் ஆடம்பர பொருட்கள் வடிவமைப்பாளர் ஸ்டூவர்ட் ஹியூஸ் தனது மூன்று வருட உழைப்பால் இந்த படகினை உருவாக்கியுள்ளார்.

இதன் விலை: $4,500 மில்லியன்

அம்பானியின் வீடு

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக மும்பையில் இருக்கும் கட்டிடம் உலகில் இருக்கும் விலை உயர்ந்த இடங்களில் ஒன்றாக உள்ளது

ஆண்டிலியா என பெயரிடப்பட்ட இந்த கட்டிடம் சுமார் 27 அடுக்குகளை கொண்டுள்ளது. இந்த மாளிகையில் பல பார்க்கிங் வசதிகள் உள்ளது. மேலும் மூன்று ஹெலிபேடுகளும் உள்ளன.

இதன் மதிப்பு விலை - $2,000 மில்லியன் ஆகும்

வில்லா லியோபோல்டா

பிரெஞ்சு நாட்டின் ரிவியராவில் உள்ள வில்லா லியோபோல்டா வரலாற்றின் மிகவும் விலை உயந்த கட்டிடங்களில் ஒன்றாக உள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மத்தியதரைக் கடலின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் நேர்த்தியான உட்புற வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் மதிப்பு $506 மில்லியன் ஆகும்.

சால்வேட்டர் முண்டி ஓவியம்

லியோனார்டோ டா வின்சி என்ற புகழ்பெற்ற ஓவிய கலைஞரால் வரையப்பட்ட இந்த ஓவியம் உலக வரலாற்றில் விலை உயர்ந்த ஒன்றாக உள்ளது. 1500 இல் வரையப்பட்டதாக நம்பப்படும் இந்த ஓவியத்தின் மதிப்பு $450.3 மில்லியன் ஆகும்.

தி கார்டு பிளேயர்ஸ் ஓவியம்

புகழ்பெற்ற போஸ்ட்-இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியர் பால் செசானால் வரையப்பட்ட கார்டு பிளேயர்ஸ் ஓவியம் விலை மதிப்பு மிக்கதாக உள்ளது. இந்த ஓவியம் நம்பமுடியாத தொகைக்கு கத்தார் அரச குடும்பத்திற்கு சொந்தமாகியுள்ளது.

இதன் விலை $250 மில்லியன்

ஜெஃப் பெசோஸின் பெவர்லி ஹில்ஸ் ஹவுஸ்

இதுவும் விலை உயர்ந்த மாளிகையில் ஒன்று. சுமார் 13,000 சதுர அடியில் உள்ள இந்த கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன .

இதன் விலை விலை - $165 மில்லியன்

அடீல் ப்ளாச்-பாயர் I' ஓவியம்

ஆஸ்திரியாவில் பிறந்த பிரபல கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட், 1907 இல் "அடீல் ப்ளாச்-பாயர் I ன் உருவப்படத்தை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஓவியம் தற்போது நியூயார்க்கில் உள்ளது.

இதன் மதிப்பு விலை - $135 மில்லியன்

கிராஃப் ஹாலுசினேஷன் வாட்ச்

கிராஃப் ஹாலுசினேஷன் வாட்ச் உலகின் விலை உயர்ந்த கடிகாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கடிகாரத்தில் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் வைரங்கள் உள்ளன.

இதன் விலை - $55 மில்லியன்

1962 ஃபெராரி ஜி.டி.ஓ

இது கார்களில் விலை மதிப்பு மிக்க ஒன்றாக உள்ளது. இது மொத்தமே 36 தான் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன் விலை - $48.4 மில்லியன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?