Lucky travellers got air tickets worth $10000 for just $300 by mistake! Twitter
உலகம்

Travel: ரூ.8 லட்சம் விமான டிக்கெட் வெறும் 24ஆயிரம் தானா? ஜப்பானியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களின் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும். ஆனால் அந்த டிட்கெட்டின்‘நியாயமான விலையை’ செலுத்த வேண்டும் என்று ANA மேலும் கூறியது.

Priyadharshini R

குறைந்த கட்டணத்தில் எகானமி வகுப்பு விமான டிக்கெட்டைப் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு காரணம் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 8 லட்சம் ரூபாய் வரை இருக்கும்

ஜப்பானியர்களுக்கு இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. $10,000 (ரூ. 8.2 லட்சம்) மதிப்புள்ள டிக்கெட்டுகளை வெறும் $300க்கு (சுமார் ₹ 24,000) வாங்கியுள்ளனர்.

அறிக்கைகளின்படி, ஜப்பானிய விமான நிறுவனம் சில வணிக வகுப்பு டிக்கெட்டுகளின் விலையை தற்செயலாக குறைத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து ஜப்பானுக்கும், பின்னர் நியூயார்க்கிற்கும், சிங்கப்பூர் மற்றும் பாலிக்கு திரும்பவும் டிக்கெட்டுகளுக்கு தவறான கட்டணங்களை வழங்கியது.

கவனிக்க வேண்டிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜகார்த்தாவிலிருந்து டோக்கியோ மற்றும் நியூயார்க் வழியாக கரீபியன் தீவுகளுக்குச் சென்று மீண்டும் திரும்ப முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு ஒரு ஃப்ளையர் வெறும் $890 (ரூ. 73,000) செலுத்தியிருக்கிறார்.

எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிழைக்கான காரணம் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக விமான நிறுவனம் மேலும் கூறியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களின் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.

ஆனால் அந்த டிட்கெட்டின்‘நியாயமான விலையை’ செலுத்த வேண்டும் என்று ANA மேலும் கூறியது.

ஒரு விமான நிறுவனம் கவனக்குறைவாக பிரீமியம் இருக்கைகளை அதிக தள்ளுபடியில் விற்பனை செய்வது இதுவே முதல் முறை அல்ல.

2019 ஆம் ஆண்டில், Cathay Pacific Airways Ltd வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் டிக்கெட்டில் இவ்வாறு கவனக்குறைவு நடந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?