பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது.
கடந்த 2,3ம் தேதிகளில் பிரதமர் மோடி லட்சதீவு சென்று, அங்கிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. சுற்றுலாப்பயணிகள் இந்தியாவின் லட்சத்தீவுக்கு நிச்சயம் செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதனால் சுற்றுலாவை பொருளாதாரத்துக்கான முக்கிய காரணியாக நம்பியிருக்கும் மாலத்தீவு எதிர்வினையாற்றியிருக்கிறது.
மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்யும் வகையில் “சுற்றுலா துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றம் ஒன்றே, சுற்றுலா துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்" என்று சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்தார்.
மேலும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் மோடி முர்தாபாத் என்றும் விமர்சித்துள்ளனர். விமர்சித்த அமைச்சர்களை அந்நாட்டு அரசு தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த நிலையில், "தேச ஒற்றுமைக்காக இந்தியா - மாலத்தீவு இடையேயான விமான பயணத்துக்கான முன்பதிவுகளை Ease My Trip நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்கிறது" என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust