Snake (rep) Pexels
உலகம்

கையில் பிடித்த பாம்பை மீண்டும் மனிதர்கள் மீதே வீசிய நபர் - வைரல் வீடியோ

Keerthanaa R

கையில் பாம்பை பிடித்த ஒருவர் அதை தூக்கி எறிய முற்பட்டு வேறு பக்கம் இருந்த மனிதர்கள் மீதே போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண மக்கள் வரை, பாம்பின் மீது பயமில்லாதவர்கள் எவரும் இல்லை.

இந்த பயம் இல்லாதவர்களால் பல சமயங்களில் நமக்கு ஆபத்து வந்துவிடுகிறது. இங்கும் ஒருவர் அப்படித்தான் ஒருவர் செய்கிறார்

ஏரி ஒன்றுக்கு அருகில் சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தண்ணீரிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரி நீர்நிலைகளில் நாம் பாம்பு போன்ற ஊர்வன உயிரினங்களை பார்ப்பது வழக்கம் தான். இங்கும் ஒரு பாம்பு தண்ணீருக்குள் இருந்து வெளியில் வருகிறது

வெளியே வேகமாக வரும் பாம்பை கரையில் இருக்கும் ஒருவர் பிடிக்கிறார். கையில் எடுத்த பாம்பை, அங்கும் இங்கும் பார்த்து எங்கு வீசி எறியலாம் என்று பார்த்துவிட்டு பின்புறமாக மீண்டும் தண்ணீருக்குள் எறிகிறார்

ஆனால் கையிலிருந்து பாம்பு விடுபட்ட பிறகு தான் தெரிகிறது அவர் வீசிய இடத்தில் சிலர் படகில் வந்துகொண்டிருந்தனர். பாம்பு அவர்கள் வந்த படகில் விழ, அதிலிருந்தவர்கள் உடனே தண்ணீருக்குள் குதித்து தப்பித்துக்கொண்டனர்.

இந்த வீடியோவை டிவிட்டரில் ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு காப்ரா பகிர்ந்திருந்தார். அதில் அவர், "எண்ணம் மட்டுமல்ல, பார்வையும் சரியாக இருக்கவேண்டும்" என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.

இது தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?