தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை நம்மில் பலருக்கு இருக்கிறது. சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் தானாக பிரச்சினை சரியாகி விடும், சிலருக்கோ, அது பல வருடங்கள் தொடரும்.
இந்த தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை ஒருவருக்கு கின்னஸ் உலக சாதனையை பெற்று தந்திருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
36 வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஸ்ய கதையை பற்றி பார்க்கலாம்...
மைக்கேல் டிக்சன் என்பவருக்கு தான் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை இருந்தது. இவர் ஒரு நாள் தூக்கத்தில் ரயில் ஏறிச் சென்று, சுமார் 160 கிலோமீட்டர் கடந்து சென்றுள்ளார்.
தூக்கத்தில் கடக்கப்பட்ட அதிக தூரம் இது தான் என கின்னஸ் உலக சாதனைகள் இவரை அங்கீகரித்தது.
மைக்கேலுக்கு அப்போது 11 வயது இருக்கும். ஏப்ரல் 6 1987ல் அதிகாலை சுமார் 2.45 மணியளவில் ரயில்வே அதிகாரி ஒருவர், தனியாக ஒரு சிறுவன் அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் உள்ள பெரு ரயில் தடத்தில் நின்றிருப்பதை கவனித்தார்.
காவல் துறைக்கு துரிதமாக தகவல் அளிக்கப்பட்டது.
விசாரித்ததில் சிறுவன் தனது பெயர் மைக்கேல் டிக்சன் என்றும் தனது அடையாளங்களையும் கூறியுள்ளான். குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்த சிறுவன் எப்படி அங்கு வந்து சேர்ந்தான், என்ன நடந்தது என்பது பற்றி அவனுக்கு தெரியவில்லை. அவனது நைட் டிரஸை அணிந்துக்கொண்டு வீட்டின் அருகில் ரயிலில் ஏறி, இண்டியானா அடைந்துள்ளான்.
பயணித்தின் போது கால்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவனுக்கு தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை இருப்பது தெரியும். ஆனால், வீட்டை விட்டு வெளியேறி கிட்ட தட்ட 160 கிலோமீட்டர் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டறிந்த கின்னஸ் உலக சாதனைகள் அந்த சிறுவனுக்கு கின்னஸ் அங்கீகாரமும் கொடுத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust