சீனா: மகனை தொடர்ந்து 17 மணி நேரம் வீடியோ கேம் விளையாட செய்த தந்தை - ஏன்?
சீனா: மகனை தொடர்ந்து 17 மணி நேரம் வீடியோ கேம் விளையாட செய்த தந்தை - ஏன்? ட்விட்டர்
உலகம்

சீனா: மகனை தொடர்ந்து 17 மணி நேரம் வீடியோ கேம் விளையாட செய்த தந்தை - ஏன்?

Keerthanaa R

பள்ளியில் கொடுத்த வீட்டுப்படத்தை முடிக்காமல் நள்ளிரவு வரை ஃபோனில் வீடியோ கேம் விளையாடியதால், தொடர்ந்து 17 மணி நேரம் மகனை தூங்கவிடாமல் தண்டனை அளித்திருக்கிறார் சீனாவை சேர்ந்த நபர்.

குழந்தைகளிடம் செல்ஃபோன் பயன்பாடு சற்று அதிகரித்திருக்கிறது. இதற்கு ஒரு வகையில் பெற்றோரும் காரணம் எனலாம்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டுப்பாடத்தை முடிக்காமல் இரவு 11 மணி வரை வீடியோ கேம் விளையாடியதாக தெரிகிறது.

இதனை அறிந்த சிறுவனின் தந்தை அவனுக்கு கடுமையான தண்டனையை வழங்கியிருக்கிறார். முதல் நாள் நள்ளிரவு 1 மணி தொடங்கி மறுநாள் மாலை 6 மணி வரை இடைவிடாது அச்சிறுவனை வீடியோ கேமையே விளையாடச் செய்துள்ளார்.

மகனுக்கு அளித்த இந்த தண்டனையை வீடியோ எடுத்து தனது டிக் டாக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

பல முறை சிறுவன் எழ முயற்சித்தும், அமர்ந்த இடத்தை விட்டு அவனை எங்கும் செல்ல விடாமல், “வாந்தி வரும் வரை விளையாடு” என தன் தந்தை கூறியதாக, அந்த சிறுவனின் கணினி குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறான்.

மேலும், இனிமேல் செல்ஃபோனில் வீடியோ கேம் விளையாடமாட்டேன் எனவும், 11 மணிக்கு முன் உறங்க சென்றுவிடுகிறேன் எனவும் தந்தைக்கு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறான் அச்சிறுவன்.

இந்த தண்டனையை மற்ற பெற்றோர் பின்பற்றவேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்

எனினும், சிறுவனுக்கு கடுமையாக தண்டனையளித்த தந்தையை இணையவாசிகள் சாடி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!