Man inflates 10 balloons in 60 seconds with his nose Youtube
உலகம்

1 நிமிடத்தில் 10 பலூன்களுக்கு மூக்கின் வழியாக காற்றை நிரப்பி கின்னஸ் சாதனை |Video

Keerthanaa R

மூக்கின் வழியாக 1 நிமிடத்தில் 10 பலூன்களில் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் டேவிட் ரஷ் என்ற நபர்.

உலகெங்கிலும் வித்தியாசமான பல விஷயங்களை செய்து மக்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர், புதியதொரு சாதனை படைத்துள்ளார்.

ஒரு நிமிடத்தில் 10 பலூன்களுக்கு தனது மூக்கை பயன்படுத்தி காற்றை நிரப்பியுள்ளார் டேவிட். இதற்கு முன்னர் ஒரு முறை, நாசியை பயன்படுத்தி 9 பலூன்களுக்கு காற்றை நிரப்பி 2016ல் அஷ்ரிதா ஃபர்மன் என்ற பெண் ஒருவர் சாதனை படைத்திருந்தார்.

5 வருடங்களுக்கு முன்பு இந்த சாதனையை முறியடிக்க டேவிட் முயன்றபோது, அலர்ஜி, சளி போன்ற பிரச்னைகள் இருந்ததால் அவரால் இதை செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது, ஒரு நிமிடத்தில் 10 பலூன்களுக்கு, தனது நாசியை பயன்படுத்தி, காற்றை நிரப்பி, புதிய சாதனையை படைத்துள்ளார் டேவிட். முந்தைய சாதனையை முறியடிக்க, கொடுக்கப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், பலூன்களுக்கு காற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், அதை கட்டவும் வேண்டும்.

ஒரு நிமிடத்திற்குள் அதிக பலூன்களுக்கு மூக்கின் துவாரம் வழியாக காற்று நிரப்பியவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் டேவிட்.

இதை தவிர, இந்த வருடம் முடிவடைவதற்குள் டேவிட் 250 கின்னஸ் சாதனைகளை படைத்துவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

நாசியை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. தமிழ்நாடு, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை என்ற இடத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர் நடராஜன் என்பவர், மூக்கின் துவாரம் வழியாக லாரி டயர்களுக்கு காற்று நிறப்பி சாதனை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?