வாக்குவாதம் நடந்த கோபத்தில் முன்னாள் காதலியின் விலையுயர்ந்த ஹேண்ட்பேகில் சிறுநீர் கழித்திருக்கிறார் வட கொரியாவை சேர்ந்த நபர் ஒருவர். அவர், காதலிக்கு 90,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோபத்தில் நாம் நம்மை அறியாமல் செய்யும் சில செயல்கள் பின்னாளில் நமக்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.
வட கொரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் தனது காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த பெண் அளவுக்கு அதிகமாக, வீண் செலவுகள் செய்து வருவதாகவும், இதனால் கடன் அதிகரித்து வருவதாகவும் அந்நபர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த காதலன், வீட்டிற்குள் சென்று தனது காதலியின் காஸ்ட்லி ஹேண்ட்பேக் ஒன்றை எடுத்து வந்து, காதலியின் கண் முன்னே அதன் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அவர் சேதப்படுத்தியது பிரபல லூயி விட்டன் ஹேண்ட் பேக். இந்திய மதிப்பில் இதன் விலை சில ஆயிரங்கள் முதல், பல லட்சங்கள் வரை!
இச்சம்பவம் குறித்து அந்த பெண் போலீஸில் புகாரளித்தார். விசாரணையின்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அந்த நபர் நிராகரித்துள்ளார். இதனால் தேசிய தடய அறிவியல் நிறுவனம் (Forensic Department) மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டது.
சோதனையின் முடிவில் அந்த நபர் சிறுநீர் கழித்தது உறுதிசெய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவர் செய்த குற்றத்தை மறைக்க அந்த பையின் மீது டியோட்ரண்ட் ஊற்றியதும் தெரியவந்தது.
பின்னர் நீதி மன்றத்தை அணுகிய அவரது காதலி, இழப்பீடு கோரி புகாரளித்தார். சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காகக் காதலனை 1.5 மில்லியின் வொன் (வட கொரிய கரன்சி) அப்பெண்ணுக்கு இழப்பீடாக வழங்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது இந்திய மதிப்பில் 90,000 ரூபாய்
மேலும் இதுவே அந்த நபரின் முதல் குற்றமென்பதால், கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையை வழங்கியுள்ளதாக நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust