தாஜ் மஹால் டு மச்சு பிச்சு: 7 உலக அதிசயங்கள், 7 நாட்கள்- புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த நபர்! ட்விட்டர்
உலகம்

தாஜ் மஹால் டு மச்சு பிச்சு: 7 உலக அதிசயங்கள், 7 நாட்கள்- புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த நபர்!

Keerthanaa R

உலக அதிசயங்கள் 7ஐயும் 7 நாட்களில் பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஜேமி மெக்டொனால்ட் என்பவர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி அட்வென்சர்மேன் என்ற பெயரால் அறியப்படுகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். இந்த 7 உலக அதிசயங்களையும் 7 நாட்களில் பார்த்து முடிக்கும் செயலை புதிய சவாலாக ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், பெட்ரா, கொலோசியம், கிறிஸ்ட் தி ரிடீமர், மச்சு பிச்சு மற்றும் சிச்செனிட்சா இட்சா ஆகியவை உலகின் 7 அதிசயங்களாக அறியப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில் அமைந்திருக்கின்றன.

இவற்றின் கட்டிடக்கலை, வரலாற்று முக்கியத்துவம் உள்ளிட்டவற்றிற்காக இவை 7 wonders of the world என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு அல்லது மூன்று நினைவுச்சின்னங்களை பார்க்கவேண்டும் என்றாலே கொஞ்சம் கஷ்டம் தான்.

ஆனால் ஜேமி மெக்டொனால்ட் ஏழே நாட்களில் 7 இடங்களையும் பார்த்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆறு நாட்கள், 16 மணி நேரம் மற்றும் 14 நிமிடங்களில்.

இதற்காக 13 விமானங்கள், 16 டாக்ஸிகள், 9 பஸ், நான்கு ரயில், ஒரு டோபோகன் ஆகியவற்றில் பயணித்திருக்கிறார் ஜேமி. பனிமலைகளில் சறுக்கி விளையாட, பயணிக்க பயன்படுத்தப்படுவது தான் இந்த டோபோகன்.

4 கண்டங்கள் 36,780 கிலோமீட்டர்களை கடந்து சாத்தியப்பட்டிருக்கிறது இந்த அதிசயம்!

ஜேமியின் இந்த செயல் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் முதலில் சென்று பார்த்தது சீனாவின் பெருஞ்சுவரை. அங்கிருந்து அடுத்ததாக இந்தியாவிற்கு வந்து தாஜ் மஹாலை பார்த்து ரசித்தார்.

இந்தியாவிலிருந்து ஜோர்டன் நாட்டிற்கு விமானம் மூலம் பயணித்து, அங்கிருந்து பேருந்து மூலம் பெட்ரா நகருக்கு சென்றடைந்தார் ஜேமி.

ஜேமியின் அடுத்த டெஸ்டினேஷன் ரோம் நகரின் கொலோசியம். அங்கிருந்து விமானம் மூலம் பயணித்து பிரேசில் நாட்டை அடைந்தவர் கிறைஸ்ட் தி ரிடீமர் சிலையை பார்த்துள்ளார். அதன் பிறகு மச்சு பிச்சு மற்றும் கடைசியாக சிச்செனிட்சா இட்சா ஆகிய இரண்டு இடங்களையும் பார்த்துள்ளார்.

டிராவல்ட்ரிப் என்ற நிறுவனம் ஜேமியின் இந்த பயணத்திற்கான உதவிகளை செய்தது. இது கின்னஸ் சாதனை மட்டுமே படைக்கும் செயலாக அல்லாமல், சூப்பர்ஹீரோ ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக சிரிங்கோமைலியா என்ற அரிய முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்ட மெக்டொனால்ட், தனக்கு உரிய சிகிச்சையளித்து மீண்டு வர ஆதரவாக இருந்த மருத்துவமனைகளுக்கு ஏதாவது கைமாறு செய்ய விரும்பினார். எனவே 2012 ஆம் ஆண்டில், மெக்டொனால்ட் இது போன்ற அட்வென்சர்கள் செய்யத் தொடங்கி,அதில் நிதி திரட்டி, மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?