மார்க் ஜுக்கர்பெர்க் Twitter
உலகம்

240 கோடி ரூபாய்க்கு வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் - ஏன்?

Priyadharshini R

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் தனது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டை விற்றுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சுமார் 7000 சதுர அடி நிலப்பரப்பில் பிரம்மாண்ட வீட்டை 2012ம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலைக்கு வாங்கினார்.

1928ல் கட்டப்பட்ட இந்த வீடானது சுமார் கால் ஏக்கர் நிலப்பரப்பில் பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டினை பல லட்சம் டாலர் செலவு செய்து மறு சீரமைப்பு செய்தார் மார்க்.

Facebook

கடந்த ஜுலை 26 ல் மர்கின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்தது. ஆனாலும் உலக பணக்காரர்கள் வரிசையில் 17வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் 10 மில்லியனுக்கு வாங்கிய வீட்டினை தற்போது 31 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் 240 கோடிக்கு விற்றுள்ளார். தற்போது மார்க்கின் சொத்து மதிப்பு 61.9 மில்லியன் டாலர் ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் அதன் தளத்தை மேம்படுத்த இருப்பதாகக் கூறிய நிலையில் மார்க் தனது வசதியான வீட்டினை விற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?