Meet the man who married over 100 women in his lifetime TWitter
உலகம்

105 பெண்களை திருமணம் செய்த நபர்: ஒரு விவாகரத்து கூட இல்லை - மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

32 ஆண்டுகளில் இந்த நபர் 105 பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், இந்த பெண்கள் யாரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, விக்லியோட்டோவைப் பற்றியும் யாருக்கும் அதிகம் தெரியாது.

Priyadharshini R

32 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து அதிசய சாதனை செய்துள்ளார். அதிலும், அவர் தனது நூற்றுக்கணக்கான மனைவிகளில் ஒருவரைக்கூட விவாகரத்து செய்ததில்லையாம்!

நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம் புரிந்த ஜியோவானி விக்லியோட்டோவின் கதையை விவரிக்கும் வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஜியோவானி விக்லியோட்டோ என்பது அவரது உண்மையான பெயர் அல்ல. அவர் தனது கடைசி மனைவியை மணந்தபோது அவர் பயன்படுத்திய பெயர் என்று கூறப்படுகிறது. அப்போ அவரின் உண்மையான பெயர் என்ன?

53 வயதில் பிடிபட்டபோது, தனது பெயர், நிகோலாய் பெருஸ்கோவ் என்றும், தான் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இத்தாலியின் சிசிலியில் பிறந்ததாக கூறினார்.

ஆனால் வழக்கறிஞர் ஒருவர் அவரது உண்மையான பெயர் ஃபிரெட் ஜிப் என்றும் அவர் ஏப்ரல் 3, 1936 அன்று நியூயார்க்கில் பிறந்தார் என்றும் கூறினார்.

105 பெண்களை திருமணம் செய்த கில்லாடி

1949 மற்றும் 1981 க்கு இடையில் அதாவது 32 ஆண்டுகளில் இந்த நபர் 105 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், இந்த பெண்கள் யாரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, விக்லியோட்டோவைப் பற்றியும் யாருக்கும் அதிகம் தெரியாது.

ஒவ்வொரு முறையும் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி 27 வெவ்வேறு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் 14 பிற நாடுகளில் உள்ள பெண்களை அவர் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு திருமணமும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும், ஒவ்வொரு திருமணத்திற்கும் பிறகு, விக்லியோட்டோ தனது புதிய மனைவியின் பணம் மற்றும் உடைமைகளுடன் மறைந்துவிடுவார் என்று GWR இணையதளம் கூறுகிறது.

விக்லியோடோ இந்த பெண்களை சோர் பஜாரில் சந்திப்பார். தனது வலையில் விழும் பெண்களுடன் திருமணம் செய்துக் கொள்வார்.

பெண்களிடம் தான் வெகு தொலைவில் வசிப்பதாகவும், தனக்கு சேர வேண்டிய அனைத்து பொருட்களையும் மூட்டை கட்டி வைக்குமாறு கூறுவாராம்.

மனைவி உடைமைகள் அனைத்தையும் லாரியில் போட்டு அனுப்பி விடுவார். பொருட்கள் கொண்ட லாரி சென்ற பிறகு, மனைவிகளை தொடர்பே கொள்ள மாட்டார்.பல மனைவிகள் பல இடங்களில் பல முறை புகார் அளித்தும் மோசடிப் பேர்வழியை பிடிக்கமுடியவில்லை.

மோசடி மன்னனிடம் கடைசியாக ஏமாந்த ஷரோன் கிளார்க் என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் விக்லியோட்டோ 28 டிசம்பர் 1981 அன்று பிடிபட்டார்.

அவரது விசாரணை ஜனவரி 1983 இல் தொடங்கியது. அவருக்கு மொத்தம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இது தவிர, $336,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி 8 ஆண்டுகள் அரிசோனா சிறையில் கழித்தார். அவர் 1991 இல் தனது 61 வயதில் மூளை ரத்தக்கசிவு காரணமாக இறந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?