Indians

 

Twitter

உலகம்

Morning News Tamil : உக்ரைனில் இந்தியர்கள் பிணைக்கைதிகளா? - இன்றைய முக்கிய செய்திகள்

Antony Ajay R

உக்ரைனில் இந்தியர்கள் பிணைக்கைதிகளா?

உக்ரைன் - ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.


கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள், பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சரகம் குற்றம் சாட்டியுள்ளது.


எங்கள் தகவல்களின்படி, உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர் என்று ரஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


உண்மையில், அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க ரஷ்ய ராணுவத்தினர் தயாராக உள்ளன. மேலும் ரஷிய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த ராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


முன்னதாக நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசுகையில்,கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷிய ராணுவம் உதவவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Students

உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி?

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போர் சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை 17000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன் முடி, அந்த மாணவர்கள் இங்கு உயர் கல்வியைத் தொடர்­வ­தற்­குரிய சூழல் இருந்­தால் அது கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்­றும் மாநி­லம் முழு­வ­தும் பொறி­யி­யல் கல்லூரி­களில் நிறைய இடங்­கள் உள்­ளன என்­றும் அவர் கூறினார்.

“நாடு திரும்­பிய மாண­வர்­கள் விரும்­பிய கல்­லூ­ரி­கள் கிடைக்காவிட்­டா­லும், இருக்­கின்ற இடங்­களில் அவர்­களைச் சேர்த்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை தமி­ழக அரசு மேற்கொள்­ளும்,” என்­றார் அமைச்­சர் பொன்­முடி.

இதற்கிடையில், இந்திய மாணவர்களுக்கு உதவிட போலந்து தயார் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் மருத்துவ படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் விரும்பினால், போலந்தில் அவர்கள் விட்ட வகுப்பிலிருந்து தொடர்ந்து படிக்கலாம் என போலந்து அரசு கூறியுள்ளது.

Russian Minister

மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால்.. - உக்ரைன் அமைச்சர் எச்சரிக்கை

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்குச் சம்மதித்தது.


இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க இருக்கிறது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்திவருவதால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், " எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க வேண்டிய அவசியத்தின் பேரில் இந்த தாக்குதலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். பிற நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. ஆனால் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாகப் பிற நாடுகள் அணி திரண்டால் அது வேறு சில விரும்பத்தகாத முடிவுகளுக்கு வித்திடும். அதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்தால், அது இதுவரை நடக்காத ஒன்றாக இருக்கும். மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அதில் நிச்சயம் அணு அயுதம் பயன்படுத்தப்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதை எங்கள் நாடு விரும்பவில்லை, ஆனால் எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதுவரை அணு ஆயுதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத ரஷ்யா, உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அணு ஆயுத தாக்குதல் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவை விட அதிக அளவு அணு ஆயுதங்களை ரஷ்யா கையிருப்பில் வைத்துள்ளது. சுமார் 6000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யா தங்கள் நாட்டில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

surya, Jyothika

16 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த ஜோதிகா மீண்டும் படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிப்பதோடு, அதை தயாரிக்கவும் உள்ளார். இதில் ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கனவே 2018ல் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.

Stalin

நீட்டை ரத்து செய்வதே முதல் இலக்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.

நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது கர்நாடகமுன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும்வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் ‘நீட் தேர்வை’ ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும்.அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் மீது குற்றம் கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில்மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். பிரதமர் மோடி, தமதுஅமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் பற்றி தேவையற்ற கருத்துகள் கூறுவதைத் தடுத்து, இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?