வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்ததிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையில் பகைமை நிலவி வருகிறது. தென்கொரியாவின் அதிபராக இருந்த மூன் ஜே இன் கடந்த 5 ஆண்டுகளாக வடகொரியாவைச் சமாதானம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அதைப்பொருட்படுத்தவில்லை. தென்கொரியாவில் அண்மையில் நடந்து முடிந்து அதிபர் தேர்தலில் யூன் சுக் இயோல் வெற்றி பெற்று அதிபரானார். இவர், வடகொரியா மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர். வடகொரியா குறித்து அவர் பேசுகையில், "பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு கிம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது அவரது விருப்பம். நாம் செய்ய வேண்டியது, வடகொரியாவின் மோதலிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப்பதல்ல. வடகொரியாவைச் சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற அணுகுமுறை தோல்வியடைந்துள்ளது" எனப் பேசியிருக்கிறார்.
இலங்கை மிக மோசமான பொருளாதார சூழலில் சிக்கியிருக்கிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இலங்கைக்குக் கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் இருமுறை ரூ.3, 750 கோடியை இந்தியா கடனாக வழங்கியது. ஏற்கெனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. இலங்கைக்குக் கடந்த 21-ம் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா அனுப்பியது. தற்போது, இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. அந்த கப்பல், நேற்று கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று தொடங்கியது. இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, " குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்திருக்கிறது. அதன் செயல்முறை மகத்தான வடிவம் பெற்றிருக்கிறது. நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மன உறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும், ஆர்வமும் அளிக்கிறது" என்றார்.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வந்தார். அவருக்குத் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவர் மேட்டூரில் இரவு தங்கினார். இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக அல்லது தாமதமாக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திறக்கப்படுகிறது.
இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே குவாலிபையர் 1 நடைபெறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust