ரஷ்ய மக்கள் போராட்டம்

 

Twitter

உலகம்

Morning News Tamil : தயார் நிலையில் ரஷ்ய அணு ஆயுதப்படை

Antony Ajay R

அணு ஆயுதங்களை தயார்படுத்தும் ரஷ்யா

பல சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேட்டோ ரஷ்யா மீதான பிடியை இறுக்கியுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவின் அணு ஆயுத படை பிரிவினரை தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ மந்திரிக்கும், படைத்தளபதிக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உக்ரைன் மீதான போரில் எந்த நாடும் நேரடியாக தலையிட்டால் வரலாற்றில் காணாத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மிரட்டல் விடுத்தார். அத்துடன் தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் ரஷ்யா எந்த நிலையிலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்காது என்றே சர்வதேச அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படி கையில் எடுத்தால் அது 3-ம் உலகப்போராக மாறும் ஆபத்துக்கு வழி நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது, ரஷ்ய அதிபர் புதின் அறிவித்த அணுசக்தி அவசரநிலை ஆபத்தானது என்றும் பொறுப்பற்ற செயல் என்றும் நேட்டோ படைகளின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.

RK Selvamani

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் ஆர்.கே. செல்வமணி வெற்றி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுப்போடும் உறுப்பினர்களாக சுமார் 1900 பேர் உள்ளனர். இன்று நடத்தப்பட்ட தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.


இன்னொரு தரப்பில், கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு பதிவான வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வாக்குகளில் பாதிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரைத்தறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் முன்னாள் அதிபர் போரோஷென்கோ

போர்களத்தில் உக்ரைன் முன்னாள் அதிபர் போரோஷென்கோ

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையிலான போர் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படையினர் வாசில்கிவ், கீவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் போன்ற நகரங்களைத் தாக்கிக் கொண்டிருப்பதால், நிலை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளுக்கும், உக்ரேனிய படைகளுக்கும் இடையேயான போரில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போர் உடைகளுடன் கியெவ் நகரில் மக்களுடன் உள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கியெவ் மக்களுடன் போர் உடையில் உள்ள போரோஷென்கோ, `ரஷ்யாவுக்கு எதிரான இந்த போரில் உக்ரைனை ஆதரித்த அனைத்து சர்வதேச தரப்பினருக்கும் நன்றி. உக்ரைனும் அதன் மக்களும் தனியாக இல்லை என்பதற்கு இதுவே பெரிய சாட்சி. நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஜனநாயகமாக இருக்க விரும்புகிறோம். எங்கள் நாட்டை நாங்கள் மீண்டும் ஐரோப்பிய குடும்பத்திற்கே திருப்பித் தர விரும்புகிறோம். புதின் உக்ரைனை வெறுக்கிறார், அவர் உக்ரேனியர்களை வெறுக்கிறார்' என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார்.

உக்ரைன் மக்களுடன் களத்தில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிற்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Actress - Liya

உக்ரைனுக்கு 10000 டாலர்கள் நிதியுதவி செய்த ரஷ்ய நடிகை!

உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவு படுத்த புதின் நேற்று உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய நடிகை லியா அகெட்ஜகோவா என்பவர் 10,000 டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைனுக்கு பொதுமக்களும் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்தும் நடந்த சம்பவங்களுக்கு ரஷ்ய நடிகை லியா மன்னிப்பு கோரியுள்ளார்.

ரஷ்ய நடிகை லியா அகெட்ஜகோவா ஒரு சோவியத் மற்றும் ரஷ்ய திரைப்படம், மேடை மற்றும் குரல் நடிகை ஆவார். அவர் 1994 இல் ரஷ்யாவின் மக்கள் கலைஞர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான இரண்டு நிகா விருதுகளையும் 2014 நிகா கௌரவப் பரிசையும் நடிகை லியா பெற்றுள்ளார்.

Ursula von der Leyen - President of the European Commission

வரலாற்றில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம்

யுக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்த சில மணிநேரத்திற்கு உள்ளாக, ஸ்வீடன் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதாக அறிவித்தது. அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டுப் பிரதமர் மேக்டெலினா ஆண்டர்சன், ஃபின்லாந்தின் மீது 1939-ஆம் ஆண்டு நடந்த சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு ஸ்வீடன் ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை அனுப்புவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

valimai

100 கோடியைத் தாண்டிய வலிமை கலெக்‌ஷன்

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

பண்டிகைகள் இல்லாத நேரத்தில் வெளியாகி ஒரு படம் இந்த அளவுக்கு வசூலித்திருப்பது என்பது இதுவே முதன்முறை என, சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக வலிமை அமைந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில், படம் வெளிவந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் மட்டும் வலிமை ரூ. 100 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமும் பெரிய பங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், வலிமையின் வசூல் வேட்டை இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?