நாம் ஹாலிவுட் படங்களில் பார்த்து வியந்த மம்மிகள் மத்திய கிழக்கு நாடுகளின் மாபெரும் கலாச்சார புதிர்கள் என்றே கூறலாம். எகிப்தில் அதிக மம்மி தொல்பொருள் படிமங்கள் கிடைத்திருக்கின்றன.
சமீபத்தில் நைல் நதிக்கரையில் தங்க நாக்குடைய மம்மிகளை மீட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குவஸ்னா கல்லறை அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்தியதில் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. இவை பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்தவை என்று தொல்பொருள் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பழங்காலப் பொருட்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் முஸ்தபா வஜிரி, தங்க நாக்குடைய மம்மிகள் கிடைத்திருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து செய்தி வெளியிட்ட எகிப்து இண்டிபெண்டன்ட் தளம், இந்த மம்மிகள் நல்ல நிலையில் இல்லை என்றாலும் நாக்கு போன்ற தங்க செதில்களை அடையாளம் காணும் அளவு எலும்புகள் இருந்தன.
உடல்களை புதைக்க பயன்படுத்தப்பட்ட மர சவப்பெட்டி துணுக்குகள் மற்றும் செப்பு ஆணிகள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
மம்மிகளில் தங்க நாக்குகள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அறிஞர்களால் இதற்கு பின்னிருக்கும் புதிரினை இன்றுவரை அவிழ்க்க முடியவில்லை.
இந்த தங்க பொருட்கள் நாக்கில் பொருத்தப்படும் அணிகலனாக இருந்திருக்க முடியாது. ஏனெனில் இவை நாக்கின் வடிவிலேயே இருக்கின்றன. தங்க நாக்குடன் முன்னோர்கள் இருந்தனர் என்பதையும் அறிவுலகம் ஏற்காது. இந்த தங்க நாக்குக்கான பயன்பாடு புதிராகவே இருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்க நாக்கு கொண்ட மம்மி படிவம் கண்டிபிடிக்கப்பட்டது. அதே ஆண்டு இறுதியில் 2500 ஆண்டுகள் பழமையான ஆண் மற்றும் பெண்ணின் எலும்புக்கூடு தங்க நாக்குடன் கண்டறியப்பட்டது.
இந்த படிமங்கள் கண்டறியப்பட்ட போது இறப்பவர்கள் மறுமைக்கு செல்வதனை உறுதிப்படுத்துவதற்காக இந்த தங்கம் வைக்கப்படுவதாக எகிப்து சுற்றுலா மற்றும் தொல்லியல் துறைக் கூறியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust