Doll Canva
உலகம்

கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்? போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை

Keerthanaa R

கடற்கரையில் கிடந்த பெண்ணின் சடலத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்

கடற்கரைகளில் வினோதமான விஷயங்கள் கரை ஒதுங்கும். அப்படி ஒரு முறை ராணுவ சின்னங்களுடன் ஒருவரின் உடல் கரையொதுங்கி சர்ச்சை கிளப்பியது. இப்போது மீண்டும், ஒரு பெண்ணின் சடலத்தை கடற்கரையில் பார்த்துள்ளனர் தாய்லாந்து மக்கள். தாய்லாந்தில் பாங்க் சாயின் என்ற நகரத்தில் ஒரு கடற்கரையில், கரை ஒதுங்கிய பெண்ணின் சடலத்தை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Dead body

உடனடியாக காவல் துறையினருக்கும், மருத்துவ உதவிக் குழுவுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அந்த உடல் கிடந்த இடத்தை சுற்றி பொது மக்கள் யாரும் புகாதவண்ணம் டேப் கட்டி, விசாரணை துவங்கினர்.

அப்போது தான் அவர்களை வியக்கவைக்கும் உண்மை ஒன்று வெளியானது. மருத்துவ உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் உடலின் அருகே சென்று பரிசோதித்து பார்த்தனர். பிரேதம் நிறம் மாறாமல் இருந்ததை கண்டு சந்தேகித்த மருத்துவ குழு, பரிசோதித்து பார்த்தபோது ரப்பர் போல இருந்துள்ளது. அப்போது தான் அங்கு கிடந்தது ஒரு sex doll என தெரியவந்துள்ளது.

அங்கு கிடந்த அந்த பொம்மை, ஜப்பானில் தயாரிக்கப்படும் AV Idol எனப்படும் செக்ஸ் டால் எனவும், இதன் விலை £469, எனவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 45,000 ரூபாய். கால்வாயில் தூக்கி எறியப்பட்ட அந்த பொம்மை, நாளடைவில் கடலுக்கு வந்தடைந்திருக்கலாம் எனவும், அப்போது கரையொதுங்கியிருக்க கூடும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் அல்லது மக்கள் மீண்டும் அந்த பொம்மையை கண்டு பயந்துவிடக்கூடாது என, அதனை அங்கிருந்து அகற்றினர். கடற்கரையில் கிடந்த அந்த உடலின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?