ரிஹோரி ஸ்கோவரோடா  Twitter
உலகம்

விளாடிமிர் செலன்ஸ்கி : "உக்ரைனின் சாக்ரடீஸ்" நினைவிடத்தை அழித்த ரஷ்யா - என்ன நடந்தது?

NewsSense Editorial Team

ரஷ்ய – உக்ரைன் மோதல் தொடர்ந்த வண்ணமிருக்கும் சூழலில், உக்ரைனின் புகழ்பெற்ற கவிஞர் ரிஹோரி ஸ்கோவரோடா என்பவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் பணிபுரிந்த அருங்காட்சியகத்தையும், அவர் புதைக்கப்பட்ட இடத்தையும் ரஷ்யப் படையினர் தாக்கி அழித்திருக்கிறார்கள்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள கார்கிவ் கவர்னர் ஓலே சின்யெஹுபோவ், “ நீங்கள் ஸ்கோவரோடவின் நினைவிடங்களை அழிக்கலாம். ஆனால், அவர் குறித்த எங்கள் நினைவுகளையும், அவர் மீதான மதிப்பையும் அழிக்க முடியாது!" என்று ஒரு டெலிகிராம் பதிவில் கூறியிருக்கிறார். ஆமாம் யார் அந்த ரிஹோரி ஸ்கோவரோடா?

ஒருங்கிணைந்த ரஷ்யாவில் 1974-ஆம் ஆண்டு பிறந்த ஸ்கோவரோடா, ”உக்ரைனின் சாக்ரடீஸ்” என்றழைக்கப்படும் அளவிற்கு தத்துவ மேதையாகவும், ஆசிரியராகவும் கவிஞராகவும் இருந்திருக்கிறார். சர்ச் ஸ்லவோனிக், ரஷ்யன், உக்ரேனியன் ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவாராக விளங்கியிருக்கிறார்.

தற்போதைய உக்ரைனில் உள்ள க்யேவ் மாகாணத்தில் இருக்கும் ”கியேவ் மொகிலா அகாடமி”யில் தனது கல்வியைப் பெற்றார். ஆன்மீகம் மற்றும் தத்துவார்த்தமான சிந்தனைகள் என்று எழுதி வந்த அவர் மிகவும் ஏழ்மையான பிச்சைக்கார நிலையில் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவரது துண்டு பிரதிகள் மூலம் பைபிளில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசி வந்தார். ஸ்கோவரோடாவின் முதல் புத்தகம் 1798 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்டது. ஸ்கோவரோடாவின் முழுமையான படைப்புகள் 1861 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் முதன்முறையாக வெளியிடப்பட்டன. இந்தப் பதிப்பிற்கு முன்பு அவருடைய பல படைப்புகள் கையெழுத்துப் பிரதி வடிவில் மட்டுமே இருந்தன.

Garden of Divine Songs மற்றும் 30 கதைகள் அடங்கிய “Basni Khar’kovskiia (Kharkiv Fables)” உள்ளிட்ட அவரது புகழ்பெற்ற படைப்புகள் பெரும்பாலும் லத்தீன் மொழியிலேயே இருந்தன. இவை தவிர லத்தீன் மொழியில் அவர் இயற்றிய பல பாடல்களும், கதைகளும் உக்ரேனிய நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக மாறியது.

இப்படி உக்ரேனியர்களின் வாழ்வில் தன் எழுத்துகளாலும், கருத்துகளாலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்கோவரோடாவின் நினைவிடங்களை அழித்ததன் மூலம் ரஷ்யா தங்களுடைய பண்பாட்டுக் குறியீடுகளையும் அழிப்பதாக உக்ரை அதிபர் ரஷ்யா மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?