Mysteries about oceans that intrigue the travel world
Mysteries about oceans that intrigue the travel world Twitter
உலகம்

பெருங்கடல் அதிசயங்கள்: கடலுக்கு அடியில் இருக்கும் நகரம் டு ஒளிரும் அலைகள் - பின்னணி என்ன?

Priyadharshini R

உலகமே அதிசயங்களாலும், மர்மங்களாலும் சூழப்பட்டுள்ளது. நம்மலுக்கு தெரிந்து சில, தெரியாமல் பல உள்ளன. தனி கண்டம், மனித காலடிபடாத குகைகள் என பல விசித்திரமான விஷயங்களை இந்த அண்டம் கொண்டுள்ளது.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நாம் அனைவரும் அறிந்த பெர்முடா முக்கோணம், இதனை சுற்றி பல்வேறு விஷயங்கள் உலா வருகின்றன.

அப்படி உலகப் பெருங்கடல்களைப் பற்றிய சில மர்மங்கள் குறித்து இங்கே காணலாம்

ஜப்பான் அட்லாண்டிஸ்

அட்லாண்டிஸ் நகரம் என்பது பண்டைய கிரேக்க நாட்டில் உள்ள ஒரு கற்பனையான தீவு நகரமாகும். பெர்முடா முக்கோண மர்மக் கடல் பகுதி முதல் பல மர்மங்களில் அட்லாண்டிஸ் புராணக் கதையை மக்கள் நம்புகிறார்கள்.

சமீபத்தில் ஆழ்கடல் மூழ்குபவர்கள் பசிபிக் கடல் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

அது அட்லாண்டிஸுக்கு செல்லும் பாதையா என்று தற்போது சதிக் கோட்பாட்டு வாதிகளால் விவாதிக்கப்படுகிறது.

தி ப்ளூப்

இது 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) நீருக்கடியில் ஒரு உயர்-வீச்சு ஒலி கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில், நீருக்கடியில் இராணுவப் பயிற்சிகள் அல்லது ராட்சத ஸ்க்விட்கள் அல்லது திமிங்கலங்கள் காரணமாக இந்த ஒலி ஏற்பட்டதாக ஊகங்கள் இருந்தன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, NOAA விஞ்ஞானிகள் அண்டார்டிக் பனிப்பாறையில் இருந்து பனிப்பாறைகள் விரிசல் மற்றும் உடைந்து வெளியேறியதால் ஒலி என்று அதனை விளக்கினர்.

பயோலுமினென்சென்ஸ்

இரவில் ஒளிரும் கடற்கரைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த ஒளிரும் கடற்கரைக்குப் பின்னால் பைட்டோபிளாங்க்டன் அல்லது பிளாங்க்டன் எனப்படும் நுண்ணுயிர்கள் ஈடுபட்டுள்ளதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

இருளில் ஒளிரும் இந்த ஒளியானது அடிப்படையில் ‘பயோலுமினென்சென்ஸ்’ எனப்படும் மிதவை உயிரிகளால் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வாகும். மிதவை உயிரிகள் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான்.

பெர்முடா முக்கோணம்

பல தசாப்தங்களாக பெர்முடா முக்கோணம், விமானங்கள், கப்பல்கள் மற்றும் மக்கள் காணாமல் போனதன் மூலம் கவனத்தை பெற்றது.

இந்த முக்கோணம் பெர்முடா, மியாமி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ இடையே 500,000 சதுர மைல் கடல் பரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, 1918 இல் 300 பணியாளர்களுடன் ஒரு இராணுவக் கப்பல் காணாமல் போனது, அதே இடத்தில் 1945 இல், குண்டுவீச்சுகளில் முழுப் படையும் காணாமல் போனது. இரண்டு நிகழ்வுகளிலும், எந்த இடிபாடுகளும் காணப்படவில்லை என்பது இன்றும் மர்மமாக உள்ளது.

கருங்கடல்

கடல் புகை என்றும் அழைக்கப்படும், கருங்கடலில் இருந்து எழும் விசித்திரமான நீராவி நீண்ட காலமாக மக்களை கவர்ந்திழுக்கிறது.

கடல் நீரின் ஈரப்பதம், குளிர்ந்த காற்றை நீரின் மேற்பரப்பில் எதிர்கொள்வதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டது. பின்னர், வல்லுநர்கள் இந்த நிகழ்வு சிறிய நீர்நிலைகளிலும் மிகவும் பொதுவானது என்பதைக் கண்டறிந்தனர்.

பால்டிக் கடல்

பால்டிக் கடல் மத்திய தரை கடலை சார்ந்த ஒரு கடல். இது மத்திய ஐரோப்பாவுக்கும் வட ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்துள்ளது

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன்கள் வரையிலான போர்க்கால ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடற்கரையின் பல்வேறு பகுதிகளில் சிதைவடைந்தால் சுற்றுச்சூழல் பேரழிவை தூண்டுவதற்கான அபாயகரமான சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த கடல் குறித்த இன்றும் விவாதிக்கப்படுகிறது.

பால் கடல் நிகழ்வு

இது விசித்திரமான பால் போன்ற பளபளப்பான இந்தியப் பெருங்கடல் நீரைக் குறிக்கிறது. இது கடலில் ஒரு ஒளிரும் நிகழ்வாகும், இதன் போது கடல் நீரின் பெரிய பகுதிகள் ஒளிஊடுருவக்கூடியதாகத் தெரிகிறது.

அறிக்கை படி 1915 மற்றும் 1993 க்கு இடையில், சுமார் 235 பால் கடல்கள் காணப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை வடமேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு பயோலுமினசென்ட் பாக்டீரியா செயல்பாட்டின் காரணமாக நிகழ்கிறது. இருட்டில் பார்க்கும்போது பால் வெள்ளை நிறத்தில் தெரிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?