Nand Mulchandhani Twitter
உலகம்

நந்த் மூல்சந்தானி: அமெரிக்கா CIA உளவு அமைப்பின் தலைமை பொறுப்பில் இந்தியர் - யார் இவர்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலிக்கான் வேலி தகவல் தொழில்நுட்ப நிபுணரும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கூட்டு செயற்கை நுண்ணறிவு மையத்தின் தற்காலிக இயக்குநருமான நந்த் முல்சந்தானி, சி ஐ ஏ வின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக (சி.டி.ஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.

Keerthanaa R

ஒவ்வொரு நாடும் தன்னை சர்வதேச அளவில் அப்டேடடாக வைத்துக் கொள்ளவும், வெளிநாடுகளில் தங்களுக்கு எதிராக நடக்கும் சதித் திட்டங்களை முறியடிக்கவும் ஒரு வெளிநாட்டு உளவு அமைப்பை வைத்திருக்கும்.


இந்தியா, ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் என்கிற ரா (RAW) அமைப்பை வைத்திருக்கிறது. அமெரிக்கா சி ஐ ஏ (சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி) என்கிற அமைப்பை வைத்திருக்கிறது.

CIA

சி ஐ ஏ அமைப்பின் சர்வதேசப் பணிகளைக் குறித்து கூகுளிடம் கேட்டால், அவ்வமைப்பு சாதித்த ஆபரேஷன்கள், சொதப்பிய ஆபரேசன்கள், சி ஐ ஏ செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆபரேஷன்கள் என ஜிபி கணக்கில் பல செய்திகளைக் கொட்டும்.


அப்பேற்பட்ட, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்காவின் வெளிநாட்டு உளவு அமைப்பு முதல் முறையாக முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி (சி டி ஓ) ஒருவரை நியமித்திருக்கிறது.

Nand Mulchandhani

சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி என்றழைக்கப்படும் சி ஐ ஏ (CIA) அமைப்பின் இயக்குநர் வில்லியம் ஜோசஃப் பர்ன்ஸ், நந்த் மூல்சந்தானியை சி ஐ ஏ அமைப்பின் முதல் சி டி ஓ (முதன்மை தொழில்நுட்ப அதிகாரி) அதிகாரியாக நியமித்து அவ்வறிவிப்பை வெளியிட்டார்.


இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்பதவிக்கு வருவதற்கு முன்பு, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஜாயின்ட் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் சென்டரில் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

CIA

அது போக ஓபன் டி என் எஸ் (சிஸ்கோ நிறுவனத்தால் வாங்கப்பட்டது), ஆப்லிக்ஸ் (ஒரக்கில் நிறுவனத்தால் வாங்கப்பட்டது), டிடெர்மினா (வி எம் வேர் நிறுவனத்தால் வாங்கப்பட்டது), ஸ்கேல் எக்ஸ்ட்ரீம் (சிட்ரிக்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது) என பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முக்கிய பதவியில் பணியாற்றியவர்.


ஒட்டுமொத்தமாக சிலிகான் வேலியில் சுமார் 25 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லியில் ப்ளூ பெல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துவிட்டு, அமெரிக்காவில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் கணிதம் படித்தார். அதன் பிறகு பல்வேறு ஐடி மற்றும் ஐடி சார்ந்த பணி அனுபவங்களுக்குப் பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் இவர்.


"இந்த பதவியில் சி ஐ ஏ முகமையில் இணைவதை மிகவும் பெருமிதமான ஒன்றாகக் கருதுகிறேன்" என நந்த் மூல்சந்தானி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Nand Mulchandhani

"சி ஐ ஏவின் எதிர்கால செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல, முகமை அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நந்த் மூல்சந்தானி உறுதி செய்வார்" என சி ஐ ஏ முகமையும் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.

1947ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி, அமெரிக்காவின் வெளிநாட்டு உளவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை, அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை உளவு பார்த்துத் தக்க நடவடிக்கைகளை எடுப்பது, அமெரிக்க அரசை அது குறித்து எச்சரிப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறது இவ்வமைப்பு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?