மார்ச் 28 சூரிய புயல் Pexels
உலகம்

மார்ச் 28 சூரிய புயல்: நாசா எச்சரிக்கை! பூமிக்கு என்ன பாதிப்பு நடக்கும்?

Niyasahamed M

அமெரிக்க விண்வெளித்துறை நிறுவனமான நாசா மார்ச் 28 திங்கட்கிழமை அன்று ஒரு சூரியப் புயல் நேரடியாக பூமியைத் தாக்கும் என எதிர்பார்ப்பதாக எச்சரித்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து மின்காந்த வெடிப்புகள் அதிக அளவில் பாய்வதால், இந்த நிகழ்வு சூரிய புயல் என்று அழைக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்திலிருந்து இங்கிலாந்தை நோக்கி ஒரு வலுவான சூரிய புயல் மோதும் அபாயம் இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

இருப்பினும், சூரிய புயல் பூமியுடன் மோதும் நேரம் குறித்து நாசாவிற்கும் அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்திற்கும் (NOAA) இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மோதலை முன்னறிவித்த நாசா, மார்ச் 28 ஆம் தேதி காலை 6 மணிக்கு புயல் தாக்கும் என்று கூறியது, அதேசமயம் அமெரிக்காவின் NOAA இந்த சம்பவத்தை 18 மணி நேரத்திற்கு முன்பே மதிப்பிட்டுள்ளது. இந்தப் புயல்தாக்கும் போது இங்கிலாந்தில் பிரகாசமான ஒளியின் பளபளப்பைக் காணலாம்.

சூரியக் காற்று பூமியின் காந்தப்புலம் அல்லது வளிமண்டலத்தில் நுழையும் போது, அது வளிமண்டலத்தை ஒளிரச் செய்கிறது, இது பொதுவாக அரோரா போலரிஸ் என்று அழைக்கப்படுகிறது. வடக்கு அரைக்கோளத்தில், இது வடக்கு ஒளி என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனின் மேற்பரப்பில் வெடித்துள்ள சூரியப் புயலால் விண்வெளிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூமியின் மேற்பரப்பைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடும் சில சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விண்வெளியின் வானிலை பெண்" என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் தமிதா ஸ்கோவ் இந்தப் புயலின் விளைவு குறித்து கூறியுள்ளார். அதன்படி பூமியின் எந்தப் பகுதியிலும் புயல் தாக்கும் போது பகல் நேரத்தில் அதிக அதிர்வெண் ரேடியோ பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.

இந்த மோதலின தாக்கம் பூமியின் நடுவில் உள்ள அட்சரேகைகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று டாக்டர் ஸ்கோவ் குறிப்பிட்டார். சூரியப் புயல் வானத்தைத் தாக்கும் போது ஏற்படும் பிரகாசமான ஒளியை மக்கள் பார்க்க முடியுமா என்று கேட்ட போது டாக்டர் ஸ்கோவ், நியூயார்க்கின் கிராமப்புறங்களில் இதைக் காணலாம் என்றால்.

அரோரா போலாரிஸ் என்று அழைக்கப்படும் இந்தப் புயலின் ஒளியை தென்துருவத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கே உள்ள தீவான டாஸ்மேனியாவில் பார்க்கலாம். அப்போது இப்பகுதிகளில் போதுமான அளவு இருள் இருப்பதால் புயலின் வெளிச்சம் இங்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

டென்னசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் பில்லி டேட்ஸ், சூரிய புயல் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு ஒளிரும் விளைவை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அதே நேரத்தில் நேவிகேஷன் சிஸ்டம் என அழைக்கப்படும் வழிசெலுத்தும் அமைப்பின் இயக்கத்தை பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

NOAA – நோவா அறிக்கையின் படி சூரியப் புயல் அழகானா அரோரா போலிஸ்களை உருவாக்கும் அதே நேரத்தில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் போன்ற வழிகாட்டும் அமைப்புகளை சீர்குலைத்து, மின்சார கிரிட் மற்றும் சேனல்களில் தீங்கு விளைவிக்கும் புவி காந்த மின்னோட்டங்களை உருவாக்கலாம்.

கடந்த மாதல் ஒரு சிறிய காந்தப் புயல் ஏற்பட்ட போது அது எலன் மாஸ்க்கின் சாட்டிலைட் மூலம் இணையத் தொடர்பு சேவை அளிக்கும் பல ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை அழித்து அவை பூமியின் மேற்பரப்பைச் சுற்றி வந்தன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?