வட கொரியா: அதிபர் மகள் பெயரை யாரும் சூட்டக்கூடாது - புதிய தடை விதித்த கிம் ஜாங் உன் அரசு ட்விட்டர்
உலகம்

வட கொரியா: அதிபர் மகள் பெயரை யாரும் சூட்டக்கூடாது - புதிய தடை விதித்த கிம் ஜாங் உன் அரசு!

வட கொரிய பெண்கள், பெண் குழந்தைகள் என யாரும் அதிபரின் மகள் பெயரை இனி உபயோகிக்கக்கூடாது.

Keerthanaa R

அதிபர் கிம் ஜாங் உன் மகளின் பெயரை வைத்துள்ள நாட்டு பெண்கள், பெண் குழந்தைகளின் பெயர்களை மாற்றச் சொல்லி வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

ஃபாக்ஸ் நியூஸின் அறிக்கையின்படி, வட கொரிய அரசு இந்த பெயர் மாற்றத்தை நிஜத்தில் வற்புறுத்தி வருகிறது.

வட கொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன். இவரது மகளின் பெயர் ஜூ ஏ (Ju Ae). அதிபர் கிம்மிற்கு பிறகு வட கொரியாவின் அடுத்த ஆட்சியாளர் யாராக இருக்கக்கூடும் என்ற யூகத்தில், இந்த பத்து வயது சிறுமியும் இருக்கிறார்

இந்நிலையில், அதிபரின் மகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் அதே பெயரை நாட்டில் உள்ள மற்ற எந்த பெண்ணும் வைத்திருக்கக்கூடாது என்ற புதிய கட்டளையை விதித்திருக்கிறது அரசு.

இதன்படி, வட கொரிய பெண்கள், பெண் குழந்தைகள் என யாரும் இந்த பெயரை இனி உபயோகிக்கக்கூடாது.

ரேடியோ ஃப்ரீ ஏசியாவின் அறிக்கையின்படி, வடகொரியாவிலிருந்து இரண்டு பெயர் வெளியிடாத நபர்கள் வடக்கு மற்றும் தெற்கு பியோங்யாங் நகரங்களின் உள்ளூர் அரசாங்கம், ஜூ ஏ என்ற பெயரைக் கொண்டுள்ள பெண்களின் பெயர்களை மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். அவர்களது பிறப்புச் சான்றிதழிலும் மாற்றுமாறு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தலைவர்களின் பெயர்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை அங்கு இருந்தது தான். கடந்த 2014ஆம் ஆண்டில் அதிபர் கிம் ஜாங் உன் பெயரை வைத்துள்ள ஆண்கள் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவிக்கிறது.

இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, ஜோயிங்ஜூ நகரத்தின் பாதுகாப்பு அமைச்சு அதிபரின் மகள் பெயரான ஜூ ஏ என்ற பெயரை வைத்திருக்கும் பெண்களை வரவழைத்து, “ஒரு வாரக் காலத்திற்குள் தங்களது பெயர்களை மாற்றவேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வட கொரிய ராணுவத்தினரை அதிபர் சந்தித்தபோது அவரது மகள் ஜூ ஏவும் உடன் வந்திருந்தார்.

கிம் ஜாங் உன் தான் செல்லும் இடங்களுக்கு மகளையும் அவ்வப்போதுக் கூட்டி செல்வதால், அடுத்த வாரிசு இவர் தான் என்ற பேச்சுக்கள் சற்று அதிகமாக மக்கள் மத்தியில் உலா வருகின்றன.

இதற்கு காரணம், கிம்மின் மூன்று மக்களில் ஜூ ஏ மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு காட்சியளிக்கப்படுகிறார் என்பதே

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?