செலன்ஸ்கி: ஆஸ்கர் விருது விழாவில் பேச உக்ரைன் அதிபருக்கு அனுமதி மறுப்பு - ஏன்?
செலன்ஸ்கி: ஆஸ்கர் விருது விழாவில் பேச உக்ரைன் அதிபருக்கு அனுமதி மறுப்பு - ஏன்? Twitter
உலகம்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி: ஆஸ்கர் விருது விழாவில் பேச அனுமதி மறுப்பு - ஏன்?

Keerthanaa R

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்த உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கியின் வேண்டுகோளை மறுத்துள்ளது ஆஸ்கர் அமைப்பு.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உக்ரைன் அதிபருக்கு ஆஸ்கர் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. இதன் ஒளிபரப்பை மறுநாள் மார்ச் 13 ஆம் தேதி இந்தியாவில் காணலாம்.

ஆஸ்கர் விழாவில் உலகெங்கிலும் இருக்கும் திரையுலகினர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்கவும், உரையாற்றவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. கலாச்சாரம் குறித்து துவக்க உரையாற்ற கோரிக்கை விடுத்திருந்தார் செலன்ஸ்கி.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. ஓராண்டு முடிவடைந்தும், இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. போர் தொடங்கியது முதல் அதிபர் செலன்ஸ்கியோ க்ராமி, கோல்டன் க்ளோப், கான்ஸ் திரைப்பட விழாக்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாற்றி வந்துள்ளார்.

வெரைட்டி மேகசினின் அறிக்கையின்படி, WME பவர் ஏஜன்ஸியின் மைக் சிம்ப்சன் என்பவர் அதிபர் செலன்ஸ்கி ஆஸ்கர் விழாவில் உரையாற்ற கோரிக்கையை வைத்ததுள்ளார். ஆனால், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக திரைத்துறையை சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆஸ்கர் அமைப்பு கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும், அரசியல் சார்ந்த எந்த ஒரு விஷயத்தையுமே தவிர்க்க விரும்புகிறது எனவும் அமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது

அதிபர் செலன்ஸ்கி இவ்வாறான பொது நிகழ்வில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த டொரண்ட்டோ திரைப்பட விழாவிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் உக்ரைனுடன் எல்லா விதத்திலும் நாங்கள் துணை நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?