இஸ்லாமிய வெறுப்பின் கொடூரம்: 6 வயது சிறுவனுக்கு 26 கத்தி குத்து - எங்கே? கொலையாளி ( Twitter )
உலகம்

இஸ்லாமிய வெறுப்பின் கொடூரம்: 6 வயது சிறுவனுக்கு 26 கத்தி குத்து - எங்கே?

விசாரணையில் அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காகவே கொல்லப்பட்டுள்ளதும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Antony Ajay R

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் 32 வயது பெண்ணையும் அவரது 6 வயது மகனையும் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே கொலை செய்துள்ளார் ஜோசப் ஜூபா என்ற 72 வயது நபர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நடந்துவருவது இந்த கொலைக்கான தூண்டுதலாக இருந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஞாயிறு அன்று இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கொலையாளியால் தாக்கப்பட்ட பெண் குளியறை வரை ஓடி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

காவல்துறையினர் அங்கு சென்ற போது தாயும் மகனும் உடலில் பல காயங்களுடன் கிடந்ததைக் கண்டுள்ளனர். அவர்களது மார்பு, உடற்பகுதி மற்றும் தோல்பட்டையில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளன.

குறிப்பாக 6 வயது சிறுவன் உடலில் 26 கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவர்களால் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இஸ்லாமிய சிறுவன்

கொலையாளி ஜூபா அவர்களது குடியிருப்புக்கு அருகில் உட்கார்ந்திருந்ததை காவல்துறையினர் பார்த்து அவரைக் கைது செய்துள்ளனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபிறகு விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காகவே கொல்லப்பட்டுள்ளதும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இறந்தவர்களின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. தகவல்களின் அடிப்படையில் சிறிவனின் பெயர் வடேயா அல்-ஃபயூமே, மற்றும் அவரது தாயார் Hanaan Shahin எனக் கூறப்படுகிறது. இவர்கள் பாலஸ்தீனிய-அமெரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை. நமது நம்பிக்கை, பிரார்த்தனை முறை, நாம் யார் போன்றவற்றுக்கான பயத்தில் இருந்து சுதந்திரமாக இருக்கும் அடிப்படை மதிப்பீடுகளுக்கு எதிரானதாக இந்த செயல் இருக்கிறது. அமெரிக்கர்களாக நாம் ஒன்றுசேர வேண்டும். இஸ்லமோஃபோபியா (Islamophobia) மற்றும் அனைத்து வகையான மதவெறி மற்றும் வெறுப்பை நிராகரிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?